Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முற்றிய “ஜாதி வெறி”.. தலித்துகள், அம்பேத்கரை இழிவுபடுத்தி நாடகம்! பல்கலை. முதல்வர், மாணவர்கள் கைது

தலித்துகளையும் அம்பேத்கரையும் தரக்குறைவாக இழிவுபடுத்தும் வகையில் பல்கலைக்கழக விழாவில் நாடகம் அரங்கேற்றியது தொடர்பாக முதல்வர், மாணவர்கள் உட்பட 9 பேர் கைதாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சட்டமேதை அம்பேத்கரையும், தலித் மக்களையும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் வைத்து அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பல்கலைக்கழக விழா மேடையில் நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்ப்புகள் வலுத்த நிலையில், 8 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தலித் மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் அவரது சிலைகளை தகர்த்தும் சேதப்படுத்தியும் வருகின்றனர்.

குறிப்பாக சாதி, மத வெறி பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பரப்பப்படுவதுடன் மாணவர்களிடம் ஆசிரியர்களே சாதி, மத பாகுபாட்டுடன் நடந்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.

 பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம்

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம்

இந்த நிலையில்தான் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற ஜெயின் பல்கலைக்கழகத்தில் இளைஞர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாக நடந்து வந்த இந்த விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கடந்த 6 ஆம் தேதி அந்த பல்கலைக்கழக மேலாண்மை துறை மாணவர்கள் சார்பில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

அம்பேத்கருக்கு அவமரியாதை

அம்பேத்கருக்கு அவமரியாதை

ஆனால், இந்த நாடகத்தில் நகைச்சுவைக்கு பதிலாக ஜாதி வெறியே நிரம்பி இருந்தது. பேசப்பட்ட பின்னணி குரலில் ஒலித்த வசனங்கள் பட்டியலின மக்களையும், அண்ணல் அம்பேத்கரையும் இழிவுபடுத்தும் வகையிலும், இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையிலும் இருந்தன. குறிப்பாக அம்பேத்கரின் இனிஷியலில் வரும் "பி.ஆர்" என்பதை "பீர்" என தவறான அர்த்தம் தரும் வகையில் நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் உச்சரித்தனர்.

 தலித்துகள், இடஒதுக்கீடு பற்றி விமர்சனம்

தலித்துகள், இடஒதுக்கீடு பற்றி விமர்சனம்

அதேபோல் தலித் என்ற பெயரை பிரித்து அவர்கள் வேறு அர்த்தம் தரும் வகையில் விமர்சிப்பதுடன், தலித்துகள் காதலிப்பது வரை பல வன்மமான வசனங்கள் அதில் இடம்பெற்றன. குறிப்பாக அவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டில் பயனடைவதைபோல் விமர்சித்து பின்னணி குரல் இருந்தது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மாணவர்கள் சர்வ சாதாரணமாக இந்த நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தனர்.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு


ஒரு தரப்பினர் இதற்கு கைதட்டி ஆராவாரம் செய்ய, மேடையில் மாணவர்கள் ஜாதி வெறியுடன் தலித் மக்கள், அம்பேத்கர், இடஒதுக்கீட்டை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதை உணர்ந்த மற்ற மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கேயே எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் நடுவிலேயே நாடகம் நிறுத்தப்பட்டது.

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

இப்படிப்பட்ட ஜாதி வெறியை தூண்டும் நாடகத்தில் நடித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதற்கு அனுமதி கொடுத்த ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் அங்கிருந்த பார்வையாளர்கள் குரல் எழுப்பினார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் சஸ்பெண்ட்

மாணவர்கள் சஸ்பெண்ட்

அவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கர்நாடகா மற்றும் மும்பை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜெயின் பல்கலைக்கழகம் அறிவித்தது. அத்துடன் நாடகம் போட்ட 6 மாணவர்களை இடைநீக்கமும் செய்தது.

கைது

கைது

இந்த நிலையில் குடகு மாவட்டம் சித்தபுரா காவல்நிலையத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் முதல்வர், விழா ஏற்பாட்டாளர் மற்றும் 7 மாணவர்கள் என 9 பேரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+