"நாட்டுக்கோழி, கூடவே நெய் தோசை.." சித்தராமையாவுக்கு டிகே சிவக்குமார் கொடுத்த அசத்தல் காலை விருந்து
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாகக் கடந்த இரு வாரங்களாகவே சித்தராமையா- டிகே சிவக்குமார் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் இரு தலைவர்களுக்கும் இடையேயான 2வது பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங் நடைபெற்றது. சித்தராமையாவை வீட்டிற்கு அழைத்த டிகே சிவக்குமார் அவருக்குக் காலை உணவைப் பரிமாறினார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இருக்கிறது. அங்குத் துணை முதல்வராக டிகே சிவக்குமார் இருக்கிறார். அங்கு டிகே சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் சித்தராமையாவை நீக்கிவிட்டு, டிகே சிவக்குமாரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

மோதல் போக்கு
கடந்த இரு வாரங்களாகவே இது தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த அதிகாரப் போட்டியில் இன்னும் ஒருமித்த தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இது தொடர்பாகப் பலகட்டப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் இடையிலான இரண்டாவது சுற்று பிரேக் பாஸ்ட் மீட்டிங் இன்று நடைபெற்றது.
சித்தராமையா vs டிகே சிவக்குமார்
இரு தலைவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டது. கர்நாடகாவில் இரு முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை உத்தரவின்படியே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.. முதற்கட்ட சந்திப்பு கடந்த சனிக்கிழமை முதல்வர் சித்தராமையா இல்லத்தில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று துணை முதல்வர் டிகே சிவகுமார் இல்லத்தில் நடந்தது. அதில் முதல்வர் சித்தராமையாவுக்கு டிகே சிவக்குமார் காலை உணவு விருந்தளித்தார்..
சித்தராமையாவை காலை உணவுக்கு வீட்டிற்கு அழைத்துள்ளதை டிகே சிவக்குமார் நேற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தினார். முதல்வர் சித்தராமையாவுக்கு பிடித்த உணவான "நாட்டுக் கோழி" பரிமாறத் திட்டமிட்டுள்ளதாக நேற்று டிகே சிவக்குமார் கூறியிருந்தார்.
உணவுப் பட்டியல்
இன்று காலை டிகே சிவக்குமார் இல்லத்திற்கு வந்த சித்தராமையாவை வீட்டு வாசலுக்கே வந்து சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் வரவேற்றார். இந்தக் காலை உணவு சிவகுமாரின் வீட்டிலேயே முழுக்க முழுக்க சமைக்கப்பட்டதாம்.. காலை உணவில் இட்லி, தோசை, உப்புமா, நாட்டுக் கோழி சிக்கன் மற்றும் காபி ஆகியவை பரிமாறப்பட்டது..
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று 2.5 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அங்கு மிகப் பெரிய ஒரு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி தரவேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 2023ல் காங்கிரஸ் வென்றபோது, முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையா, பிறகு 2.5 ஆண்டுகள் சிவக்குமாருக்கு முதல்வர் பதவி என்று உறுதியளிக்கப்பட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைமை
கடந்த இரு வாரங்களாகவே இது தொடர்பாக விவாதம் நடந்து வரும் சூழலில், இரு தலைவர்களையும் டெல்லிக்கு அழைக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக வேறுபாடுகளைத் தீர்க்கக் கட்சித் தலைமை அறிவுறுத்தியதாலேயே இந்தச் சந்திப்புகள் நடக்கிறது. இரு தலைவர்களுமே காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்து சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வரும் நானும் ஒரு குழுவாகத் தொடர்ந்து செயல்படுகிறோம். கர்நாடக மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் தணியும் நிலையில், டெல்லியில் முகாமிட்டிருந்த டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் பெங்களூர் திரும்பி வருகிறார்கள்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications