கர்நாடகா 'இரட்டை வேடம்'..காவிரி நீர் திறப்பை பட்டுன்னு பாதியாக குறைத்தது..அணைகள் நீர்மட்டம் குறையலை!
பெங்களூர்: காவிரி ஒழுங்காற்று குழு கூடிய நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீரை திறந்துவிட்ட கர்நாடகா தற்போது அந்த அளவை பாதியாக குறைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய அளவான வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு ஆய்வு நடத்தி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட பரிந்துரைத்தது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கர்நாடகா போராட்டம்: ஆனால் காவிரியில் போதுமான நீரை கர்நாடகா திறக்கவில்லை. இதற்கு காரணமாக கர்நாடகா பாஜக தூண்டிவிட்ட கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் சொல்லப்பட்டன. தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் திறக்கப்படாத நிலையில் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகிப் போயின. ஆனாலும் ஈவிரக்கமே இல்லாமல் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரையும் திறக்கக் கூடாது என போராட்டங்கள் தொடர்ந்தன.
3,000 கன அடி நீர்: இதனிடையே தற்போது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 16,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியது தமிழ்நாடு. ஆனாலும் இம்முறையும் 3,000 கன அடிநீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் இன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையமும் 3,000 கன அடி நீரை பரிந்துரைக்க உள்ளது.
கூடுதல் நீர் திறப்பு: இதனிடையே தமிழ்நாட்டுக்கு கடந்த சில நாட்களாக திடீரென கூடுதல் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் வினாடிக்கு 8615 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று கூடுதலாக இருந்தது.

நீர் திறப்பு குறைப்பு: தற்போது திடீரென தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பை வெகுவாக குறைத்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4698 கன அடி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
கர்நாடகா அணைகள் நீர் இருப்பு: கர்நாடகாவின் கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் தற்போது 100.64 அடி நீர் உள்ளது. கபினி அணையில் 57.2 அடி நீர் இருக்கிறது. இந்த அணைகளின் காவிரி நீர் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் மேட்டூர் அணையிலோ வெறும் 33.1 அடி நீர் மட்டுமே உள்ளது. இவ்வளவு காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை கூட திறக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுவோம் என்கிறது கர்நாடகா. இதைவிட பெருங்கொடுமை வேறேது?
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications