பாஜக போல காங். அரசு துரோகம்! கர்நாடகாவில் வறட்சி- காவிரி நீர் தர முடியாது- வழக்கம் போல 'பஞ்சபாட்டு'!
பெங்களூர்: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 57 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய 37 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ 10 நாட்களுக்கு 10,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

தற்போது இந்த உத்தரவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறது கர்நாடகா. இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், கர்நாடகாவில் கடுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுக்காக காவிரி நீரை திறந்துவிட்டோம். ஆனால் காவிரி நீரை தொடர்ந்து திறந்துவிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என கர்நாடகா பாஜக வலியுறுத்தி வருகிறது. கர்நாடகா பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் போதுமான ஆதாரங்களுடன் கர்நாடகா அரசு வாதாடவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

முன்னதாக டிகே சிவகுமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு போக தேவை இல்லை. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டோம் என கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பாஜகவைப் போல கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து பஞ்ச பாட்டு பாடத் தொடங்கி இருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications