காவிரி நீருக்காக தமிழகத்திடம் உரசுவாங்களே.. இப்போ, கர்நாடகா உள்ளேயே தண்ணீர் ஷேர் செய்ய மோதல், கலவரம்
பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தரக்கூடாது என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது கர்நாடகா உள்ளேயே மாவட்டம் விட்டு மாவட்டம் தண்ணீர் அனுப்புவதற்கு எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேமாவதி எக்ஸ்பிரஸ் இணைப்பு கால்வாய் திட்டம்
துமகூரு மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி ஆற்றின் தண்ணீரை பெங்களூர் தெற்கு மாவட்டத்திற்கு (முந்தைய பெயர் ராமநகரம் மாவட்டம்) கொண்டு செல்லும் ஹேமாவதி எக்ஸ்பிரஸ் இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு உள்ளூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை, ராமநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், துணை முதலமைச்சருமான, டி.கே. சிவகுமார் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

வன்முறையில் முடிந்த போராட்டம்
சனிக்கிழமை (ஜூன் 1) குப்பி தாலுகாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பாஜக மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் கலந்துகொண்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள்: பெரிய குழாய்களை தண்ணீர் போகும் பள்ளத்தில் வீசி எறிந்தனர். அரசு சொத்துக்களை சேதப்படுத்தினர். பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். டயர்களை எரித்து சாலை போக்குவரத்தை முடக்கினர்.
வழக்கு பதிவான முக்கிய நபர்கள்
இதையடுத்து குப்பி போலீசார் 13 வழக்குகள் பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் அடங்குபவர்கள்:
எம்.எல்.ஏ.க்கள்:
- பி. சுரேஷ் கவுடா (துமகூரு கிராமப்புற பாஜக எம்.எல்.ஏ.)
- ஜி.பி. ஜோதி கணேஷ் (துமகூரு நகர பாஜக எம்.எல்.ஏ.)
- எம்.டி. கிருஷ்ணப்பா (துருவேகேரே ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.)
மற்ற தலைவர்கள்:
- முன்னாள் எம்.எல்.ஏ. மசாலே ஜெயராம்
- எஸ்.டி. தீலீப் குமார்
- ஏ. கோவிந்தராஜு
- எச்.எஸ். ரவிசங்கர்
மடாதிபதிகள்: இரண்டு மடாதிபதிகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அரசின் உறுதியான நிலைப்பாடு
துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இந்த திட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 40 சதவீத வேலைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இந்த நேரத்தில் திட்டத்தை நிறுத்துவதற்கு எந்த முகாந்திரமும் இப்போது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் அச்சம்
துமகூரு மாவட்ட விவசாயிகள் இந்த திட்டம் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். ஹேமாவதி ஆற்றின் தண்ணீர் மாகடி மற்றும் ராமநகரத்திற்கு திருப்பிவிடப்பட்டால், துமகூரு மாவட்டத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
அரசியல் பின்னணி
இந்த திட்டம் 2018-ல் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசின் போது முன்மொழியப்பட்டது. பின்னர் 2019-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது நிறுத்தப்பட்டது. 2023-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. இப்போது பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ்சும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தண்ணீர் பகிர்வு பிரச்சினை இப்போது மாநிலத்திற்குள்ளேயே மாவட்டங்களுக்கிடையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கன்னட அமைப்பினர், இப்போது தங்கள் மாநிலத்திற்குள்ளேயே தண்ணீர் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications