கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கள்ளக்காதலனுடன் வாழ கணவரை தீர்த்து கட்டிய பெண்.. நடுங்கவைக்கும் சம்பவம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் வாழ நினைத்த பெண் தனது கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முதுகெலும்பை உடைத்து கொடூரமாக கொன்றுள்ளார். அதன்பிறகு அவரது உடலை சாக்குப்பையில் வைத்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்குள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள கடசெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவருக்கு வயது 52. இவரது மனைவி பெயர் சுமங்கலா. இவர் திப்தூர் அருகே உள்ள கல்பட்டாரு பெண்கள் விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.

விடுதியில் சமையலராக பணியாற்றிய சுமங்கலாவுக்கு கரதலுசண்டே எனும் கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பேசினர். ஆனால் நாளடைவில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து சுமங்கலா - நாகராஜூ ஆகியோர் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளனர். தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுமங்கலாவின் கணவர் சங்கரமூர்த்திக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தனது மனைவி சுமங்கலாவை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் சண்டை நடந்தது.
இதனால் சுமங்கலா நடந்த சம்பவம் குறித்து கள்ளக்காதல் நாகராஜூவிடம் கூறினார். மேலும் தங்களின் கள்ளக்காதலுக்கு சங்கரமூர்த்தி இடையூறாக இருப்பதாக அவர்கள் நினைத்தனர். இதனால் அவரை கொல்ல முடிவு செய்தனர். அதன்பேரில் கடந்த 24ம் தேதி சுமங்கலா வீட்டில் இருந்த தனது கணவர் சங்கரமூர்த்தியின் கண்ணில் மிளகாய்பொடியை தூவினார். அவர் கண் எரிச்சலில் துடித்தார்.
அப்போது வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தாக்கினார். இதில் நிலைக்குலைந்த சங்கரமூர்த்தியின் காலை தலைக்கு நேராக தூக்கி அழுத்தினார். இதில் அவரது முதுகெலும்பு முறிந்து இறந்தார். பிறகு சம்பவம் பற்றி கள்ளக்காதலன் நாகராஜூவிடம் கூறினார். அவர் வீட்டுக்கு வரவே இருவரும் சங்கரமூர்த்தியின் உடலை சாக்குப்பையில் கட்டி 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துருவகெரே தாலுகா தன்தனிசிவரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் கிணற்றில் வீசினர்.
அதன்பிறகு வீடு திரும்பிய சுமங்கலா தனது கணவர் மாயமாகி உள்ளதாக நோனவினகெரே போலீசில் புகார் செய்தார். போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது மிளகாய் பொடி கிடந்தது. அதேபோல் படுக்கையறையில் போர்வைகள் அலங்கோலமாக கிடந்தன. இதனால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். சுமங்கலாவின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜூவிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
முதலில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சங்கரமூர்த்தியை கொன்று உடலை சாக்குப்பையில் வைத்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications