கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா.. அழைப்புவிடுக்காமல் காங்கிரஸ் புறக்கணித்த "முக்கிய தலைவர்கள்!"
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக நாளை சித்தராமையா பதவியேற்க உள்ளார். இதில் தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக இன்றி சில மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்காமல் காங்கிரஸ் புறக்கணித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நாளை பதவியேற்க உள்ளனர். பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிராக சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை அழைத்து மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதல்வராக பதவியேற்கும் சித்தராமயா சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விழாவில் பங்கேற்க அழைத்துள்ளனர். இதேபோல் பிற மாநில முதல்வர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சார்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரா ராஜா ஆகியோருக்கும் காங்கிரஸ் சார்பில் கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இருப்பினும் மம்தா பானர்ஜி இந்த விழாவில் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்பவில்லை. இன்று அதுபற்றிய விபரம் வெளியாக உள்ளது.
இருப்பினும் கூட சில மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன்படி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதிக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் காங்கிரசுடன் சுமூக உறவில் இல்லாமல் இருப்பது, சிலர் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதும் தான் அழைப்பு விடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications