சிரித்தபடியே சபாநாயகர் சொன்ன ஒரு வார்த்தை! தகுதி நீக்கம் பற்றி கோலார் பிரசாரத்தில் வருந்திய ராகுல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கினார். கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அதானி விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மேலும் தகுதி நீக்கத்துக்கு முன்பு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா சிரித்தபடியே கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்த ராகுல் காந்தி மிகவும் வருந்தினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி உள்பட மேலிட தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ராகுல் காந்தி இன்று முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

கடந்த 2019 தேர்தலில் கோலார் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது. மோடி பெயர் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று வயநாடு எம்பி பதவியை இழந்துள்ளார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று மீண்டும் கோலாரில் இருந்தே கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார்.
இந்த கோலார் பிரசாரம் முதலில் ஏப்ரல் 5ம் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 6, 9, 10 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்கிறது. இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ராகுல் காந்தி இன்று பெங்களூர் வந்தார். பெங்களூரில் இருந்து அவர் கோலார் சென்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அதானிக்கு பிரதமர் மோடி உதவியதாக குற்றம்சாட்டினார். இதுபற்றி ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். பிரதமர் மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது எனும்போது எங்களாலும் மக்களுக்காக பணம் கொடுக்க முடியும். கர்நாடகாவில் பாஜக அரசு 40 சதவீத கமிஷனில் இயங்கியது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினோம். இன்று வரை பதில் வரவில்லை. இதன்மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் மோடி ஏற்று கொள்கிறார் என்றே அர்த்தம்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதங்கள் எழுதினேன். எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. இதுபற்றி கேட்டபோது அவர் சிரித்து கொண்டே என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அவருடன் சேர்ந்து டீ குடிக்க கூறினார். அப்போது நீங்கள் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் நீங்கள் விரும்புவதை செய்யலாம். ஆனால் நீங்கள் ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள் என கேட்டேன். அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அவர் பயப்படுகிறார். அதோடு நானும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டேன்.
அதானிக்கு ெஷல் கம்பெனி உள்ளதாக நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். மேலும் 20 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்? என கேள்வி எழுப்பினேன். பொதுவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் முடக்குவார்கள். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் பாஜகவே நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளது'' என காட்டமாக விமர்சனம் செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications