பெரிய பெரிய சேஞ்ச்.. திரும்ப திரும்ப வரும் பாஜக.. கூடவே காங்கிரஸ்.. விரட்டும் ஜேடிஎஸ்.. மாறும் வரலாறு
பெங்களூரு: நாடு முழுவதும் கர்நாடக தேர்தல் ரிசல்ட்டை எதிர்நோக்கியே மக்கள் காத்துள்ளனர்.. இந்த அளவுக்கு கர்நாடக தேர்தல் முடிவுக்கு, அனைவருமே முக்கியத்துவம் காரணம் என்ன? கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமா? என்ற ஆர்வம் மிகுந்த கேள்வியும் எழுகிறது.
கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை, இதுவரை 15 முறை சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன.. இவைகளில் காங்கிரஸ் கட்சியே பெரும்பாலும் வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ளது... கடந்த 30 வருடங்களில், ஆட்சி மாற்றங்கள் நிகழ தொடங்கின.

யாருக்கு வெற்றி: அதாவது, சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, 1983-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது.. அதாவது, 1978 வரை நடந்த 6 சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று கர்நாடகத்தை தக்க வைத்து வந்தது.
83-க்கு பிறகுதான், ஜனதா தளம் ஆட்சியை பிடித்தது.. 1985-ம் ஆண்டு தேர்தலிலும் வென்றது.. பிறகு, 1989-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.. பிறகு, 1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மறுபடியும் ஜனதா தளம் வென்றது.. 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்றது.. இப்படி ஜனதா தளமும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியமைத்து கொண்டே வந்தநிலையில்தான், 2004-ம் ஆண்டு ஜேடிஎஸ் & பாஜக கூட்டணி அமைகிறது.
கூட்டணி கட்சி: ஆரம்பத்தில் கூட்டணியுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், அடுத்து நடந்த 2008-ம் ஆண்டு தேர்தலில், மெஜாரிட்டியை பிடித்தது.. தனித்தே மொத்த ஆட்சியையும் கைப்பற்றியது.. இதற்கு பிறகு, 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.. கடந்த 2018-ல் நடந்த தேர்தலை பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் 2பேருக்குமே மெஜாரிட்டி கிடைக்கவில்லை..
இத்தனைக்கும் பாஜக 104 இடங்களில் வென்றும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.. இந்த சூழலில்தர்ன, காங்கிரஸ் கட்சி தடலாடியாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தரவும், குமரசாமி முதல்வரானார்.. எனினும், பதவியேற்றதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் வெடிக்கவும், ஒரே வருடத்தில் சர்ச்சைகள் சூழ்ந்தன.. ஆட்சியும் நீடிக்கவில்லை..
காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் சிலர் திடீரென ராஜினாமா செய்ததால், பாஜகவுக்கு சான்ஸ் அடித்தது.. அதாவது, ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைத்துவிட்டது. இடைத்தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. எடியூரப்பா + பசவராஜ் பொம்மை என முதல்வர் பொறுப்பை அடுத்தடுத்து ஏற்றனர்..

வெற்றி யாருக்கு: இந்த முறை நடக்க போவது, 16-வது சட்டசபை தேர்தல் ஆகும்.. இதில் யாருக்கு வெற்றி என்று தெரியவில்லை.. ஒருசாரார் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார்கள்.. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டுமெனில், அது மெஜாரிட்டி இடங்களைக் கைபற்ற வேண்டியிருக்கிறது.. தங்களுக்கு மெஜாரிட்டியே இல்லாவிட்டாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அதுவும் பாஜகவுக்குதான் வாய்ப்பாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
எனினும், இவர்களில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி உள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications