கர்நாடகா: தேவகவுடா குடும்ப கட்சி மஜத கலைப்பு? பாஜக ஜோதியில் இணைப்பு? குமாரசாமி சொன்ன பதில் என்ன?
பெங்களூர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி (மஜத) (ஜேடிஎஸ்) விரைவில் கலைக்கப்பட்டு பாஜகவிலேயே இணையுமா? என்பது குறித்து அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவற்றுடன் மாநில கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பிரதான கட்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கக் கூடிய கட்சிதான் மஜத எனும் ஜேடிஎஸ். ஒவ்வொரு தேர்தலிலும் சொற்பமான இடங்களைப் பெற்றாலும் ஏதோ ஒருவகையில் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொள்கிற வாய்ப்பை பெற்றுவிடக் கூடியதாகவும் ஜேடிஎஸ் இருந்து வருகிறது.

மரண அடி வாங்கிய ஜேடிஎஸ்: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு மரண அடி கிடைத்தது. ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகள் பெருமளவு காங்கிரஸுக்கு திரும்பின. இதனால் வெறும் 19 இடங்களில்தான் ஜேடிஎஸ் பெற முடிந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்த போதும் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் இயல்பாகவே பாஜகவுடன் கை கோர்த்துவிட்டது ஜேடிஎஸ்.
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: பாஜகவைப் பொறுத்தவரையில் கூட்டணி என நம்பி சேரும் கட்சிகளை கரைத்து தமது ஜோதியில் இணைத்துக் கொள்வதை 'கொள்கை' போல வைத்திருக்கிறது. இதனால் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்த நாள் முதலே இன்னும் எத்தனை மாதம் இந்த கட்சி இருக்கும் என்கிற கேள்வியும் விவாதமும் நடைபெறுகிறது. அதற்கேற்ப ஜேடிஎஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணிக்கு எதிராக இருக்கின்றனர். ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவர் இப்ராஹிம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். கேரளா மாநில ஜேடிஎஸ் கட்சியும் போர்க்கொடி தூக்கியது. இதனால் ஜேடிஎஸ் கட்சியான தமது தொண்டர்கள் பலத்தையும் இழந்துவிட்டது.
பாஜகவில் ஜேடிஎஸ் இணைப்பா?: இந்த நிலையில்தான் ஜேடிஎஸ் கட்சியானது பாஜகவுடன் இணைந்துவிடும்.. அதாவது மதச்சார்பற்ற ஜனதா தளம் எனும் மஜத எனும் ஜேடிஎஸ் கட்சி கலைக்கப்பட்டு அப்படியே பாஜகவுடன் கரைந்துவிடும் என்கிற பேச்சு வலுவாக எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குமாரசாமி, பாஜகவுடன் ஜேடிஎஸ் கட்சியை இணைக்கும் திட்டம் இல்லை என்று மட்டும் கூறினார். ஆனால் திட்டவட்டமான மறுப்பு எதனையும் முன்வைக்காததுதான் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications