மத்திய அரசின் விவசாய சட்டங்களை கொஞ்ச நாளைக்கு பயன்படுத்தி பார்க்கலாமே- சொல்வது கர்நாடகா 'குமாரசாமி'
பெங்களூரு: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஒரு சில வருடங்களுக்கு பரிசோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்குமாறு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் இந்த சட்டங்களை ஆதரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்டமாக 29-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து உள்ள விவசாயிகள், இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என அறிவித்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கருத்து கூறி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகின்றன. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை ஒரு சில ஆண்டுகள் பயன்படுத்தி பார்க்கலாம் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், வேளாண் துறை தீய வலையில் சிக்கி இருப்பதாக பல்வேறு தரப்பில் கருத்து நிலவுகிறது. எனவே இதனை அறிய வேளாண் சட்டங்களை ஒரு சில ஆண்டுகளுக்கு பரிசோதித்து பார்க்கலாம். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு முறையான ஒருங்கிணைப்பு தேவை.
ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்த அனுமதிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சரியாகச் செயல்படவில்லை என்றால் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாயிகளுக்கு அவர் உறுதியளித்துள்ளார். இது நல்ல கருத்துதான் என்று குமாரசாமி தெரிவித்தார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications