பாஜகவிடம் வெறும் 2 சீட்டுக்கு இத்தனை போராட்டமா? கண்ணீர் விட்டு கதறும் கர்நாடகா மாஜி சிஎம் குமாரசாமி!
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் 2 தொகுதிகளுக்காக இப்படி போராட வேண்டியதிருக்கிறதே என மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) (JDS) கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலில் மண்டியா, கோலார், ஹாசன் உள்ளிட்ட தொகுதிகளை பாஜகவிடம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கேட்டிருந்தது. தற்போது கோலார் தொகுதியை பாஜக தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக- ஜேடிஎஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜேடிஎஸ் கட்சி 3 அல்லது 4 தொகுதிகளை கேட்டோம். எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும் என்பதால் 5 அல்லது 6 தொகுதிகளை எல்லாம் கேட்கவில்லை. மண்டியா, ஹாசனில் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமலேயே ஜேடிஎஸ் கட்சியால் வெல்ல முடியும். கோலார் தொகுதியை ஒதுக்க முடியாது என்கிறது பாஜக. வெறும் 2 தொகுதிகளுக்காகவா பாஜகவுடன் இப்படி ஒரு கூட்டணி அமைத்து போராடி வருகிறோம்? பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் எங்களது ஜேடிஎஸ் கட்சிக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை. எங்களால்தான் பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்கும். ஜேடிஎஸ்- பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு இன்னமும் முடிவாகவும் இல்லை; அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் இல்லை. தற்போது சிகிச்சைக்காக சென்னை செல்கிறேன். அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்ட பின்னர் விரிவாக பேசுகிறேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஜேடிஎஸ் கட்சியை இல்லாமல் அழிக்கத்தான் காங்கிரஸ் நினைக்கிறது. நாட்டின் மற்ற மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை வேறு. கர்நாடகா அரசியல் சூழ்நிலை வேறு. இதனடிப்படையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications