லோக்சபா தேர்தல்: கர்நாடகாவில் பாஜகவுக்கு 'செட் பேக்' வெயிட்டிங்.. அடிச்சு ஆடப் போகுதாம் காங்கிரஸ்!
பெங்களூர்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 10 தொகுதிகள்தான் கிடைக்குமாம்; பாஜக -ஜேடிஎஸ் கூட்டணி 18 இடங்களில் வெல்லும் என்கிறது "இண்டியா" டிவி சர்வே.
தென்னிந்திய மாநிலங்களிலேயே கர்நாடகாதான் பாஜகவுக்கு ஆறுதலைத் தரக் கூடிய மாநிலம். லோக்சபா தேர்தலில் கூட கர்நாடகாவில்தான் கணிசமான தொகுதிகளை பாஜக அள்ளுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் பாஜக மொத்தம் 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுமலதா அம்பரீஷ் 1 தொகுதியில் வென்றார். காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்த போதும் தலா ஒரு இடத்தில்தான் ஜெயிக்க முடிந்தது.
2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 51.38% வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 31.88% வாக்குகளையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மொத்தம் 9.67% வாக்குகளையும் பெற்றது.
2024 லோக்சபா தேர்தலில் கர்நாடகா நிலவரம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான இண்டியா டிவி சர்வே முடிவுகள்: பாஜக -16; மதச்சார்பற்ற ஜனதா தளம்- 2; காங்கிரஸ் 10 இடங்களில் வெல்லுமாம்.
பாஜக 16 இடங்களில் வென்றாலும் முந்தைய 2019 தேர்தலை ஒப்பிடுகையில் 9 தொகுதிகளை இழக்கும்; காங்கிரஸ் அந்த 9 தொகுதிகளைக் கைப்பற்றும்.
2024 தேர்தலில் வாக்கு சதவீதம் எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக இண்டியா டிவி வெளியிட்ட முடிவுகள்: பாஜக 44%; காங்கிரஸ் 40%; மதச்சார்பற்ற ஜனதா தளம் 11%.
கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் கருத்து கணிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பாஜக கூட்டணிக்கு 18 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 7 முதல் 9 இடங்கள் கிடைக்கும் என்றது டைம்ஸ் நவ் டிவி.
கர்நாடகா நிலவரம் தொடர்பாக இண்டியா டிவி சேனல், டைம்ஸ் நவ் டிவி சேனல் இரண்டு ஏறக்குறைய ஒரே மாதிரியான முடிவுகளைத் தான் கருத்து கணிப்புகளில் தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு அதிக இடங்கள்தான் என்ற போதும் 2019 தேர்தலை ஒப்பிடுகையில் பெரும் பின்னடைவுதான் கர்நாடகாவில் காத்திருக்கிறது என்கின்றன இக்கருத்து கணிப்பு முடிவுகள்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications