சிடி ரவிக்கு எம்பி சீட் இல்லை.. ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்.. இறங்கி அடித்த எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த சிடி ரவிக்கு சீட் வழங்கப்படவில்லை.. இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளர்கள் இந்த முறை எடியூரப்பாக டார்க்கெட் செய்து ஒதுக்கிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் ஒவ்வொரு மாநிலமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன.. இதில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 3 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பாஜக மேலிடம் ஒதுக்கி உள்ளதால் மீதமுள்ள ஐந்து தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக சார்பில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் எம்பியாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியை ஈஸ்வரப்பா தனது மகன் கந்தேஸ்க்கு கேட்டிருந்தார். ஆனால் பசவராஜ் பொம்மையை எடியூரப்பா நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, பிஎஸ் எடியூரப்பா தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களை புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் . மேலும் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக ஷிமோகா தொகுதியில் தன்னை சுயேட்சையாக நிற்கும்படி பொதுமக்கள் கேட்கிறார்கள் என்றும் அது பற்றி யோசித்து வருவதாகவும் கொந்தளித்துள்ளார்.
தற்போதைய பட்டியலில், கர்நாடகாவில் 8 எம்.பி.க்களுக்கு மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்வது என்றால், சித்தேஸ்வர், நளின்குமார் கட்டீல், கரடி சங்கண்ணா, சதானந்தகவுடா, பிரதாப்சிம்ஹா, பசவராஜ் உள்ளிட்ட எம்.பி.க்களுக்கு எம்பி சீட் இந்த முறை வழங்கப்படவில்லை.
கர்நாடாக அரசின் ஜெயதேவா இதய ஆஸ்பத்திரி இயக்குனராக இருந்த டாக்டர் மஞ்சுநாத் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றிருந்தார், அவருக்கு பெங்களூரு புறநகர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையான இந்த தொகுதியில் டிகே சுரேஷ் போட்டியிடுவார் என்பதால் அவருக்கு எதிராக தேவகவுடாவின் மருமகனான டாக்டர் மஞ்சுநாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.
உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் எம்.பி.யாக உள்ள மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தாவணகெரே தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சித்தேஸ்வருக்கு பதில் அவரது மனைவி காயத்ரிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மைசூரு-குடகு தொகுதியில் மன்னர் யதுவீரும், பெங்களூரு புறநகரில் தேவேகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத்தும் போட்டிட உள்ளார்கள். துமகூரு தொகுதியில் எக்காரணம் கொண்டும் சோமண்ணாவுக்கு கடும் எதிர்ப்பையும் மீறி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மைசூரு-குடகு தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் உடையாருக்கு டிக்கெட் வழங்கப்பட்டிருக்கிறது. பல்லாரி தொகுதியில் முன்னாள் மந்திரி ஸ்ரீராமுலுவுக்கும், உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக தமிழக மேலிடப்பொறுப்பாளராக இருந்த சிடி ரவி எம்பி தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.. இவர் ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக தலைவராக விரும்பியிருந்தார்.
ஆனால் அந்த போட்டியில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா வெற்றி பெற்றார். அதன்பிறகு எடியூரப்பாவில் சிடி ரவி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டதாகவும், தற்போது எம்பி சீட்டும் மறுக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கர்நாடகாவில் தற்போது எடியூரப்பாவின் ஆதிக்கமே இருப்பதாகவும் சீனியர் பாஜக தலைவர்கள் குமுறுகிறார்கள்.. ஈஸ்வரப்பா, சிடி ரவி, என தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருக்கிறார்கள்..
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications