Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல் 2024:பாஜக தலைமையிலான NDA-ல் இணைகிறது தேவகவுடா- குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லோக்சபா தேர்தலுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தேவகவுடா- குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) (மஜத) மும்முரமாக நடத்தி வருகிறது.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக மத்தியில் ஆளும் பாஜக ஒரு பக்கம் வியூகம் வகுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை கூட்டி இருக்கிறது.. அதேபோல பாஜகவை வீழ்த்துவதற்கு 25-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடி இருக்கின்றன. பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தவிர பிரதான பெரிய கட்சிகள் தற்போதுவரை இணையவில்லை. மாநிலங்களில் சிறிய சிறிய கட்சிகள்தான் பாஜக அணியில் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் பாஜக தமது கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.

Loksabha Election 2024: Kumaraswamy JDS begin talks to join BJP lead NDA

இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறது தேவகவுடா- குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம். ஆகையால் பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை படுதீவிரமாக நடத்தி வருகிறார் குமாரசாமி என்கின்றன கர்நாடக வட்டாரங்கள்.

ராஜ்யசபா எம்பி பதவி மூலமாக மத்திய அமைச்சர் பதவி அல்லது கர்நாடகா சட்டசபையில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகியவற்றை மையமாக வைத்து இருதரப்பும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம். அத்துடன் லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளை குமாரசாமியின் ஜேடிஎஸ் கேட்கிறதாம். பாஜக தரப்போ, 7 தொகுதிகள் என்பது மிக அதிகம்; 4 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என கூறி வருகிறதாம். இந்தப் பேச்சுவார்த்தை இழுபறியாக நீண்டு கொண்டிருப்பதாலேயே நாளை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இதுவரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மதச்சார்பற்ற ஜ்னதா தளம் கட்சி 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்தின் ஒக்கலிகா கவுடா வாக்குகளின் ஆதரவைப் பெற்றது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி. அண்மையில் நடைபெற்று முடிவடைந்த சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெறும் 19 இடங்களில்தான் வென்றது. இதுவரையிலான சட்டசபை தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மிக குறைவான இடங்களை இந்த முறைதான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+