விமான கண்காட்சியை கவர்ந்த உள்நாட்டு தயாரிப்புகள்... தேஜஸ் விமானம், பிரமோஸ் ஏவுகணைக்கு இடம்!
பெங்களூரு: பெங்களுருவில் தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள், தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் மற்றும் சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகணை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் நடக்கும் சர்வதேச விமான கண்காட்சி வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும்.

போர் விமானங்கள் சாகசம்
இந்திய பாதுகாப்புத் துறையின் 13-வது சர்வதேச விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். 80 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 540 நிறுவனங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்
இதில் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் மற்றும் விண்வெளி பயன்பாட்டுக்கான நவீன தயாரிப்புகள், கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
பாதுகாப்பு உடை, கையில் எடுத்து செல்லக் கூடிய சமிக்ஞை கருவி, வானிலும், தரையிலும் பயன்படுத்தும் அலைக்கற்றை இணைப்புக் கருவி, சோனார் கருவி என 30 பொருட்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.
|
பிரமோஸ் ஏவுகணை கம்பீரம்
இந்தியாவின் சுகோய் சு -30 எம்.கே.ஐ போர் விமானம், சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகணை, ரபேல் போர் விமானங்கள், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) லைட் காம்பாட் விமானம் (எல்.சி.ஏ) தேஜஸ் போர் விமானம் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு போர் விமான சாகச நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications