‛‛முதுகில் குத்திய பாஜக’’.. 5 ஆண்டு காத்திருந்து பழித்தீர்த்த கார்கே.. கலபுரகியில் ‛மருமகன்’ வெற்றி
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கலபுரகி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கலபுரகி தொகுதியில் கடந்த முறை கார்கேவை வீழ்த்திய பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவை இந்த தேர்தலில் அவரது மருமகன் வீழ்த்தி பழிதீர்த்துள்ளார்.
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. கடந்த ஏப்ரல் 25 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தலா 14 தொகதிகளுக்கு அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தனது சொந்த தொகுதியான கலபுரகியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து இருந்தார்.
மாறாக கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே தனக்கு பதில் மருமகன் ராதாகிருஷ்ணாவை களம் இறக்கினார். பாஜக சார்பில் சிட்டிங் எம்பியான உமேஷ் ஜாதவ் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் வேட்பாளரான மல்லிகார்ஜுன கார்ககேவின் மருமகன் ராதாகிருஷ்ணா மற்றும் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ் ஆகியோர் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். கடைசியாக மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண வெற்றி பெற்றார்.
மோடி பெயருக்காகவே ஓட்டு போடும் மக்கள் கர்நாடகாவில்தான் அதிகம்.. இப்போ புரியுதா வெற்றி ரகசியம்!
கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா 6,52,321 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
சிட்டிங் எம்பியும், பாஜக வேட்பாளருமான உமேஷ் ஜாதவ் 6,25,116 ஓட்டுகள் பெற்றார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா 27 ஆயிரத்து 205 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் தனது மாமா மல்லிகார்ஜுன கார்கோவை தோற்கடித்த உமேஷ் ஜாதவை ராதாகிருஷ்ணா பழி தீர்த்துள்ளார். ஏனென்றால் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே 2009, 2014 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைந்தார்.
‛‛ஆப்பு வைத்த ஆபாச வீடியோ’’.. ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி.. காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி
உமேஷ் ஜாதவ் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாகவும், மல்லிகார்ஜுன கார்கோவின் ஆதரவாளராகவும் இருந்தார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு அவர் கார்கேவுக்கு எதிராக போட்டியிட்டு அவரை வீழ்த்தினார்.
மல்லிகார்ஜுன கார்கே 2 சட்டசபை தேர்தல், 2 லோக்சபா தேர்தல் என்று போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2019ல் முதல் முறையாக தோற்றார். இந்நிலையில் தான் தற்போது மருமகன் ராதாகிருஷ்ணா மூலம் உமேஷ் ஜாதவை, மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் வீழ்த்தி உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications