"இந்தியாவை" எதிர்க்க பாஜகவால் முடியுமா.. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மம்தா பரபர பேச்சு
பெங்களூர்: இன்று பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பாஜகவால் ஒரு போதும் இந்தியாவை (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) வீழ்த்த முடியாது என்றார்.
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தினர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பது அவர்கள் எண்ணம்.

இதற்கான முன்னெடுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்த நிலையில் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடந்தது.
சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது I.N.D.I.A- Indian National Developmental Inclusive Alliance இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தை நடத்திய கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்த கூட்டம் மிக சிறப்பாக இருந்ததாகவும் பல முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜகவால் இந்தியாவுக்கு (எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் I.N.D.I.A) சவால் விட முடியுமா.. நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். நாங்கள் நாட்டின் மீது பற்றுள்ள மக்கள். விவசாயிகள், தலித் மக்கள் என நாட்டில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தக் கூட்டணிக்கான பெயரை அறிவித்தார். மேலும், அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அங்கு 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கூட்டணிக்கு யார் கன்வீனர் என்று கேள்விக்கு அவர், மும்பை கூட்டத்தில் ஒருவர் முடிவு முடிவு செய்யப்படுவார் என்று தெரிவித்தார். மேலும், கன்வீனர் யார் என்பதெல்லாம் சின்ன விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications