பாதி ஆடையுடன் வந்து சின்ற சாட்சி! அதுவும் ஜட்ஜ் முன்னாடியே..! கடுப்பான வக்கீல்.
சாட்சி சொல்ல வந்தவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்துள்ளது
பெங்களூரு: ஹைகோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டே இருந்தபோது, அரை நிர்வாணமாக ஆஜரான நபரால் வக்கீல்களும், நீதிபதிகளும் அதிர்ச்சி அடைந்த சம்பவம், இன்னமும் பரபரப்பு குறையாமல் பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி..
இவரிடம் ஒரு பெண் வேலை கேட்டு வந்துள்ளார்.. அரசுவேலையே வாங்கி தருவதாக சொல்லி, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு ஒன்று அப்போது வெளியானது..

லாட்ஜ்
மேலும், இந்த பெண்ணுடன் ஒரு லாட்ஜில் ரூமில் இருந்தது போன்று ஆபாசமாக இருக்கும் வீடியோ ஒன்றும் கடந்த மார்ச் மாதம் வெளியானது... தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று சம்பந்தப்பட்ட ரமேஷ் மீது அந்த பெண்ணின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அந்த புகாரின்பேரில் பெங்களூரு கப்பன்பார்க் போலீசும், கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்தது..

விசாரணை
இதனிடையே அந்த பெண் தன்னிடம் பணம் பறிக்க முயன்றார் என்று ரமேஷ் தரப்பிலும் சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. இறுதியில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இந்த சிறப்பு விசாரணை குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டில் இளம்பெண் மனு தாக்கல் செய்து இருந்தார்.. இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டில் ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ வழக்கு குறித்த விசாரணை நடந்தது..

அறிக்கை
நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் கான்பரன்ஸ் வீடியோ மூலம் விசாரணை நடந்தது... இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இறுதி விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த விசாரணையின்போதுதான் ஒருவர் அரை நிர்வாணமாக சாட்சி சொல்ல வந்து நின்றார்.. வீடியோ கான்பரன்ஸில், அந்த நபர் சாட்சி சொல்ல ஆஜரானார்..

குற்றச்சாட்டு
அப்போது அரை நிர்வாணமாக அதாவது மேல்சட்டை போடாமல் வந்து நின்றிருக்கிறார்.. இதை பார்த்து நீதிபதியும், வக்கீல்களும் அதிர்ச்சி அடைந்தனர்.. முகம் சுளித்தனர்.. அரைநிர்வாணமாக வந்தது மட்டுமல்லாமல், அந்த நபர் குளித்து கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்ட நபர் தரப்பு வக்கீல் இந்திரா ஜெயசிங் குற்றஞ்சாட்டினார்.. மொத்தம் 20 நிமிடங்கள் அவர் வேண்டுமென்றே அரைநிர்வாணமாக வந்துள்ளதாகவும் வக்கீல் இந்திரா புகார் தெரிவித்தார்..

இன்னொரு கேஸ்
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, அந்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் அங்கேயே இந்திரா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிர்வாணமாக ஆஜரான நபருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.. அரைகுறையாக வந்து நின்றதுடன், ஆன் தி ஸ்பாட்டில் இன்னொரு வழக்கில் சிக்கி உள்ளார் அந்த சாட்சி..!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications