தாய்க்கு பலருடன் கள்ள உறவு.. ஆத்திரத்தில் தாயை பலாத்காரம் செய்து கொன்ற மகன்.. என்னா கொடூரம்?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் தாயை பாலியல் பலாத்காரம் செய்து மகனே படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் வனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரவ்வா (39). அவரது மகன் சிவப்பா (21). தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிவப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒரு செய்தி தளத்தில் வெளியான தகவலில் கூறியிருக்கையில், பாரவ்வா விவசாயக் கூலியாக இருந்து வந்தார். அவருடைய கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

பலருடன் உறவு
இந்த நிலையில் பாரவ்வாவுக்கு அப்பகுதியில் உள்ள வேறு ஒரு ஆணுடன் தவறான உறவு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், சிவப்பாவிடம் இது குறித்து கூறியுள்ளனர். ஒருவர் மட்டுமல்லாமல் பலருடன் தாய் உறவில் இருப்பதை அறிந்த மனுக்கு ஆத்திரமும் அவமானமும் ஏற்பட்டது.

வாக்குவாதம்
இதையடுத்து தாய்க்கும் மகனுக்கும் இடையே இதுகுறித்து பல முறை சண்டை ஏற்பட்டுள்ளது. இது தவறு என்றும் பலருடன் இருக்கும் தவறான பழக்கத்தை கைவிட வேண்டும் என சிவப்பா அறிவுறுத்தினார். ஆனால் பாரவ்வா அதை கேட்கவில்லை. நவம்பர் 12-ஆம் தேதி தாய் பாரவ்வா வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

கழுத்தை நெரித்து கொலை
வீட்டுக்குத் திரும்பிய பாரவ்வாவை மது அருந்தச் சொல்லி சிவப்பா கட்டாயப்படுத்தியுள்ளார். அதன் பிறகு வயல்வெளிப் பகுதிக்கு இழுத்துச் சென்ற போது சிவப்பாவுக்கும் பாரவ்வாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தாயை கீழே தள்ளிய மகன் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.

போலீஸில் புகார்
இதையடுத்து சிவப்பா எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பிவிட்டார். பாரவ்வாவின் சகோதரி அவரை தேடி அலைந்த போது வயல்வெளியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் தனக்கு சிவப்பா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சிவப்பா கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications