ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்தார்.. அப்பவே டவுட்டா இருந்தது.. கால்டாக்சி டிரைவர் பகீர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியான ஷாரிக், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் வந்து செல்பி எடுத்ததை நான் நேரில் பார்த்தேன் என்றும்.. அப்போது எனக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றும் கால்டாக்சி டிரைவர் வெளியிட்டு இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் கடந்த 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது.

இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் வெடிகுண்டை கொண்டு வந்த முகம்மது ஷாரிக் என்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.

குக்கர் வெடிகுண்டு

குக்கர் வெடிகுண்டு

பயங்கரவாத சதித்திட்டத்துடன் நாசவேலையில் ஈடுபட சென்ற போது ஆட்டோவிலேயே வெடி குண்டு வெடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத செயல் என்று தெரிவித்த கர்நாடக அரசு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜமேஷா முபீனுக்கும் முகம்மது ஷாரிக்கிற்கும் தொடர்பு?

ஜமேஷா முபீனுக்கும் முகம்மது ஷாரிக்கிற்கும் தொடர்பு?

இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஷாரிக் சென்று வந்த இடங்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷாரிக் தமிழகத்தின் கோயம்புத்தூருக்கும் வந்து சென்றது தெரிய வந்தது. இதனால், தமிழக கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபீனுக்கும் முகம்மது ஷாரிக்கிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்அப் டிபியாக ஆதியோகி சிலை

வாட்ஸ்அப் டிபியாக ஆதியோகி சிலை

இருவரும் கேரளா வந்து இருப்பதாகவும் கேரள பயங்கரவாத தடுப்பு படை தெரிவித்து இருந்தது. முகம்மது ஷாரிக் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் 4 நாட்கள் தங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் , ஷாரிக் யாருக்கும் சந்தேகம் வராத படி தனது செல்போன் வாட்ஸ்ட் அப் டிபியாக ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை வைத்து இருந்ததாக தகவல் வெளியானது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

நேரில் பார்த்த கால் டாக்சி டிரைவர்

நேரில் பார்த்த கால் டாக்சி டிரைவர்

இதனிடையே, ஈஷா யோகா மையத்திற்கு ஷாரிக் வந்திருந்ததை பார்த்தாக கோவையை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் ஆனந்த் அளித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கால்டாக்சி ஓட்டுநர் ஆனந்த் கூறுகையில், ''கடந்த மாதம் 23 ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்கு சென்றுஇருந்தேன். மறுநாள் அதாவது 24 ஆம் தேதி ஆதியோகி சிலை முன்பாக இரண்டு பேர் செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

உன்னிப்பாக பார்த்தேன்

உன்னிப்பாக பார்த்தேன்

இவர்கள் கோவிலுக்கு வரமாட்டாங்களே.. இவர்கள் வந்து எப்படி செல்பி எடுக்கிறார்கள் என்று அந்த நபர்களை நான் உன்னிப்பாக பார்த்தேன். ஷாரிக் குல்லா அணிந்து இருந்தார். அவருடன் 2 பேர் இருந்தனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் கண்டிப்பாக பதிவாகியிருக்கும். டிவியில் இது தொடர்பான செய்திகளை பார்த்த போது ஈஷாவில் செல்பி எடுத்த நபர்தான் இவர் என்று 100 க்கு 90 சதவீதம் எனது மனதிற்கு பட்டது.

எனக்கு தெரிந்ததை கூறினேன்

எனக்கு தெரிந்ததை கூறினேன்

ஷாரிக்கை பார்த்ததை அறிந்த போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் எனக்கு தெரிந்ததை கூறினேன்" என்றார். இதற்கிடையே, கால்டாக்சி டிரைவர் தகவல் கூறும் உண்மைதானா என்ரு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறதுது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+