பஸ் டிக்கெட் விலை 6,667.. ஈவு இரக்கமற்ற 'பகல் கொள்ளை' - கர்நாடக லாக்டவுன் 'கொடுமை'
பெங்களூரு: கர்நாடகாவில் 14 நாட்கள் லாக் டவுன் விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பெங்களூருவில் இருந்து வெளியேறும் எண்ணற்ற மக்களை டார்கெட் செய்து தனியார் பேருந்து நிறுவனங்கள் கொள்ளை அடித்துள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு 14 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 10 வரை அமலில் இருக்கும் இந்த லாக்டவுனில் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயங்கும். அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கும் திறந்திருக்கும் தனியார், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டுகளில் அபாய பயணம்
இந்த லாக் டவுன் காரணமாக, பெங்களூருவில் பணியாற்றும் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் குவிந்தனர். இதில், பலரும் டிக்கெட் எடுத்தும் கூட படிக்கட்டுகளில் உட்கார்ந்து அபாய நிலையில் பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டது.

மூச்சுத்திணறல்
நேற்று(ஏப்.27) இரவு 9 மணி வரை கூடுதலாக 625 அரசுப் பேருந்துகளை கர்நாடக போக்குவரத்துக் கழகம் இயக்கிய போதும், 'அதெல்லாம் எந்த மூலைக்கு' என்பதாகிவிட்டது நிலைமை. இதனால், பலரும் தனியார் பேருந்துகள் பக்கம் போனால், அங்கு டிக்கெட் விலை கொரோனா தொற்று ஏற்படாமலேயே 'மூச்சுத்திணற' வைத்துவிட்டது

தலை சுத்திடுச்சு
பெங்களூருவில் இருந்து பெலகாவி செல்ல வழக்கமாக ரூ.1000 தான் டிக்கெட் காஸ்ட். ஆனால், நேற்று எவ்வளவு வசூலித்திருக்கிறார்கள் தெரியுமா? 6,667 ரூபாய். அதுவும், இணையதளத்தில் இந்த விலையுடன் தான் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருமானமும் போச்சு
முன்னதாக, கர்நாடகாவில் லாக் டவுன் ஏதும் இருக்காது என்று அரசு அறிவித்ததை நம்பி பெங்களூரு வந்த பலரும், இப்போது ஊருக்கும் திரும்ப முடியாமல், வருமானம் இல்லாமல் பெங்களூரிலும் தங்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த 14 நாட்கள் லாக் டவுன் நீட்டிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications