கையில் ஷூக்களை தூக்கி நடந்த பெங்களூர் ஐடி ஊழியர்கள்! 6 செ.மீ. மழைக்கே ஆடிப்போன மான்யதா டெக் பார்க்
பெங்களூர்: ஐடி தொழில்நுட்பத் துறை தலைநகர் பெங்களூரில், வெறும் ஆறு சென்டிமீட்டர் மழைக்கே லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மான்யதா டெக் பார்க் உள்ளிட்ட தொழில்நுட்ப மையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
300 ஏக்கர் நிலப்பரப்பில், பல ஃபார்ச்சூன்-500 நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்த தொழில்நுட்ப பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் முழங்கால்கள் வரை நீர் இருக்கும் பகுதிகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிலர் நடந்து செல்லும்போது தங்கள் காலணிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டனர்.

இந்தநிலை சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது, வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவி, பெங்களூர் நகரத்தின் உள்கட்டமைப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தின.
வெள்ளத்தில் சிக்கிய தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்கள் அதிருப்தியை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தினர். பெங்களூரை முதன்மையான தொழில்நுட்ப இடமாக தொடர்ந்து விளம்பரப்படுத்துவதுடன் கடமை முடிந்துவிடுவதாக அரசு நினைப்பதாகவும், உள்கட்டமைப்பு பராமரிப்பை புறக்கணிப்பதாகவும் அரசை விமர்சித்தனர்.
Tech park turning to Water park ! #Manyata #BangaloreRains pic.twitter.com/m1AAW5HmqM
— Arshad ⚪ (@CoorgRocker) October 15, 2024
"ஒரு தொழில்நுட்ப பூங்காவே வெள்ளத்தில் மிதப்பது ஒரு தீவிர பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. இதை நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம், எதுவும் மாறவில்லை," என்று தரவு பகுப்பாய்வாளரான ரிதேஷ் ஆர் கருத்து தெரிவித்தார். பெங்களூரின் தொழில்நுட்பத் துறையின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மிதமான மழைக்கு கூட நகரம் எவ்வளவு பாதிக்கப்படக்கூடும் என்பதை நினைவுபடுத்தும் ஒரு எச்சரிக்கையாகவும் இருந்தது.
NATURE WILL RECLAIM ITSELF
— Karnataka Weather (@Bnglrweatherman) October 15, 2024
Manyata Tech Park, Bengaluru which was supposed to be a LAKE turned into a lake today post heavy rains#KarnatakaRains #BengaluruRains #BangaloreRains #Bangalore #INDvNZ #INDvsNZ #BengaluruWeather #BangaloreWeather #BengaluruRain #BangaloreRain pic.twitter.com/fCuG5POfW4
"குருகிராம் மற்றும் பெங்களூர்தான் உண்மையான சகோதரர்கள் போன்றவை - ஆடம்பரமான IT பூங்காக்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன, ஆனால் மழை பெய்யும் போது, சில மணி நேரங்களில் புது ஏரிகள் தோன்றும்," என்று நகைச்சுவையாக வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு நெட்டிசன் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான அரவிந்த் பெல்லாட் இதுகுறித்து கூறுகையில், பெங்களூர் முழுவதும் ஒரே நாள் மழை பெய்து வெள்ளத்தில் மூழ்கி வருகிறது! மான்யதா டெக் பார்க் மற்றும் அதற்கு அப்பால் உள்ள சாலைகள் மூழ்கியுள்ளன, ஊழியர்கள் வேலை இடங்களுக்குச் செல்ல முடியவில்லை, வணிக நிறுவனங்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளன. நகரத்தின் சிதைந்து போன உள்கட்டமைப்பு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன, இது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு. இதுதான் காங்கிரஸ் அரசாங்கம் பெருமை பேசும் 'பிராண்ட் பெங்களூரு'வா? நகரம் ஒரே நாள் மழையைத் தாங்க முடியாவிட்டால், திட்டமிடல், பொறுப்பு எங்கே?” என்று பெல்லாட் கூறினார்.












Click it and Unblock the Notifications