மராத்தி vs கன்னடம்: மகாராஷ்டிரா- கர்நாடகா இடையே 3-வது நாளாக பேருந்துகள் ரத்து- மோடி தலையிட கோரிக்கை
பெங்களூர்: மராத்தி மற்றும் கன்னட மொழி அமைப்பினர்களின் பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துநர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தை சுமூக தீர்வை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகா- மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையான பெலகாவியில் மராத்தி மொழியை பேச வலியுறுத்தி கன்னட ஓட்டுநர், நடத்துநர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்கினர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து வெள்ளிக்கிழமை இரவு முதலே நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக இரு மாநில எல்லைகள் வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவுக்குள் இயக்கப்பட்ட கர்நாடகா தனியார் பேருந்துகளில் கன்னட மொழி எழுத்துகள் அழிக்கப்பட்டு ஜெய் மகாராஷ்டிரா என மராத்தியில் எழுதியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மராத்தி மொழி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கன்னட ஓட்டுநர், நடத்துநர் மீதான தாக்குதல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு சுமூக தீர்வு காணும் வகையில் கர்நாடகா- மகாராஷ்டிரா மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வெண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதனை கர்நாடகா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications