பெங்களூரின் கோயம்பேடாக மாறிய மெஜஸ்டிக் பஸ் நிலையம்.. கொரோனா ஏற்றுமதி மையமாகுமோ என்று அச்சம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்ப ஆசைப்பட்டனர்.
Recommended Video
இதற்காக கட்டணமில்லா பஸ் சேவைகளை கர்நாடக அரசு அறிவித்தது. நேற்று காலை முதல் இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு முந்தைய நாள் இரவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் வந்து குவிந்து விட்டனர். இது பெங்களூரின் மத்திய பகுதியில் சிட்டி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள முக்கிய பஸ் நிலையமாகும்.

இரவு வந்து தங்கியவர்களுக்கு, சாப்பாடு கொடுப்பது போக்குவரத்து கழகத்திற்கு பெரும் பணியாக மாறிவிட்டது. கால் டாக்ஸி, ஆட்டோ சேவைகளுக்கு சிவப்பு நிற பகுதியான பெங்களூரில் அனுமதி கிடையாது என்பதால் பல கிலோமீட்டர்கள் நடந்து பேருந்து நிலையம் வந்துள்ளனர் தொழிலாளர்கள்.
இப்படியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மஜெஸ்டிக் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை சுற்றி கூடி விட்டதால் அது மிகப்பெரிய திருவிழா நடைபெறும் இடம் போல மாறிவிட்டது. சமூக இடைவெளி என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அந்தந்த மாநில அரசுகள் பூர்த்தி செய்திருந்தால், இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது. இவர்களில் எத்தனை பேர் நோய்த்தொற்றை பிறருக்கு கொண்டு செல்வார்கள் என்பது தெரியாது.
இப்படித்தான் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு, அங்கு மக்கள் பெருமளவில் கூடி, பல மாவட்டங்களுக்கும் நோய்களை ஏற்படுத்தி விட்டனர். பெங்களூரின் இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, கர்நாடகாவில் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications