‛‛டவுன் பஸ்ஸை விட மோசம்’’.. சோஷியல் மீடியாவில் விவாதமான விமானத்தின் இருக்கைகள்.. இண்டிகோ விளக்கம்
பெங்களூர்: பெங்களூரிலிருந்து போபால் சென்ற இண்டிகோ விமானத்தில், பயணிகள் அமரும் இருக்கையில் குஷன் இல்லாமல் இருந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
பயணங்களிலேயே விமான பயணம்தான் மிகச்சிறந்தது என்கிற தோற்றம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் இந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைக்கும் வகையில் பல சம்பவங்கள் விமான பயணத்தில் நடந்திருக்கிறது. அதில் ஒன்று தற்போது பெங்களூரில் சமீபத்தில் நடந்திருக்கிறது.

அதாவது பயணி ஒருவர் பெங்களூரிலிருந்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு போக இண்டிகோ விமானத்தில் ஏறியிருக்கிறார். பின்னர் தனக்கான இருக்கையை கண்டுபிடித்து உட்கார்ந்திருக்கிறார். ஆனால், இவருக்கு வலதுபுறம் எதிரே உள்ள சீட்டில் குஷன் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவழித்து விமானத்தில் வந்தால், இப்படி டவுன் பஸ்ஸை போல விமானத்தை வச்சியிருக்கீங்களே என்று ஆதங்கப்பட்டு, குஷன் இல்லாத சீட்டை ஃபோட்டோ எடுத்து அந்த பயணி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவ்வளவுதான் x தளம் மட்டுமல்லாது, பல்வேறு சோஷியல் மீடியா தளத்திலும் இந்த ஃபோட்டோ பகிரப்பட்டு பெரும் விவாதங்கள் உருவாகின. விமான பயணங்களில் ஏற்கெனவே இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே, இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள், இந்நாள் பயணிகள் எல்லோரும் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக பொங்கி எழ தொடங்கிவிட்டனர்.
சோஷியல் மீடியாவில் தங்களுக்கு எதிரான கருத்துக்கள் பகிரப்படுவதை கவனித்த இண்டிகோ நிறுவனம், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளது.
அதாவது "வழக்கமான தூய்மை பணிக்காக இதுபோன்று இருக்கைகளை கையோடு கழற்றி எடுத்து செல்வது வழக்கம். அதேபோலதான் இந்த முறையும் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட சீட்டை புக் செய்திருந்த பயணிக்கு இது குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது" என தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நெட்டிசன்கள் சிலர், "என்னதான் தூய்மை பணி என்றாலும் கூட ஒரு நியாயம் வேணாமா? விமானம் புறப்படும்போதுதான் தூய்மை பணியை மேற்கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான பயணி ஒருவர், தான் புக் செய்திருந்த சீட்டில் குஷன் இல்லாமல் இருந்ததை கண்டு ஷாக்காகி, நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications