ஹனி டிராப்!நேகா மீது மோகம்! பணக்கார சபலிஸ்டுகளுடன் நெருக்கமான வீடியோ எடுத்து மிரட்டிய மாடல் கைது
பெங்களூர்: டெலிகிராம் செயலி மூலம் நட்பாக பழகி பணக்காரர்களை காதல் வலையில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்த மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் என்னென்னவோ போதைகளை ஒழிக்க மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. ஆனால் சபலம் என்ற போதையை ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சித்தால்தான் அதனால் ஏற்படும் விளைவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் பெண் மீதான சபலத்தில் பணக்காரர்கள் சிலர் தனியே சென்று சிக்கி தற்போது லட்சங்களை இழந்து விட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.

பெங்களூரை சேர்ந்த பணக்காரர் ஒருவர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் டெலிகிராமில் மாடல் அழகி ஒருவர் என்னுடன் லைவ் சாட்டிங் செய்திருந்தார். அடிக்கடி அவர் என்னுடன் சாட்டிங் செய்தார். அவ்வபோது இருவரும் ஆபாசமாகவும் சேட்டிங் செய்து கொண்டோம்.
வீடியோ கால் போட்டும் பேசி கொண்டோம். இந்த நிலையில் நான் அவரை சந்திக்க சென்றேன். அப்போது அவருடன் நெருக்கமாக இருந்தேன். பின்னர் அந்த வீடியோவை காட்டி என்னிடம் பல லட்சத்தை பறித்துக் கொண்டார் என அந்த பணக்காரர் புகார் தெரிவித்தார். அந்த இளைஞர் கொடுத்த மாடல் அழகியின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஹனிடிராப் கும்பலை சேர்ந்த சரவண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகிய 3 பேரையும் முதலில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது மாடல் அழகி நேகா மெகர் என தெரியவந்தது. மும்பையில் தலைமறைவாக இருந்த அந்த மேகாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பணக்காரர்கள், தொழிலதிபர்களை நேகா குறி வைத்தாராம். டெலிகிராம் செயலி மூலம் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். சபல புத்தியுடன் இருந்த அவர்களும் நேகாவின் சொக்கு பொடி போட்ட பேச்சுக்கு மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அவ்வாறு மயங்கி தன் மீது பைத்தியமாக இருக்கும் நபர்களை ஒவ்வொருவரையாக ஜே.பி.நகர் 5ஆவது ஸ்டேஜில் உள்ள தனது வீட்டுக்கு நேகா வரவழைப்பாராம். சம்பந்தப்பட்ட நபர் அங்கு சென்றதும் பிகினி உடை அணிந்து கொண்டு அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றுவிடுவாராம். பின்னர் படுக்கை அறைக்கு அழைத்து சென்று அவருடன் தனிமையில் இருக்கும் போது அதை யாசின், அப்துல் காதர், சரவண பிரகாஷ் ஆகியோர் வீடியோவாக எடுத்துவிடுவார்களாம்.
பின்னர் அந்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது. ஒரு சிலருக்கு தங்களது மானம் மரியாதை போய்விடும் என்பதால் இவர்களுக்கு பணம் கொடுத்து சரி கட்டியுள்ளனராம். இன்னும் சிலர் இதை கிராபிக்ஸ் படம் என கூறி பணம் கொடுக்க மறுத்தால் பிகினியில் நேகாவுடன் வீட்டிற்கு செல்லும் வீடியோவை அனுப்பி மிரட்டியதும் தெரியவந்தது.
சிக்கியவர்கள் எல்லாம் 20 வயது முதல் 50 வயது வரை உள்ள பணக்காரர்கள். இவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி பணத்தை கேட்டு மிரட்டல் விடுப்பதோடு அந்த ஆண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்லி தன்னை திருமணம் செய்து கொண்டு சுன்னத் செய்து கொள்ள மிரட்டுவாராம். இல்லாவிட்டால் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications