Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிடுகிடுவென உயர்வு.. பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் டோல்கட்டணம் அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் - மைசூர் அதிவிரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடமாக குறைந்தது. இந்த சாலையில் டோல் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் கூட இன்று முதல் மீண்டும் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கும் வாகனங்கள் சுங்கக்கட்டணமாக(டோல் கட்டணம்) சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை மூலம் அந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் நாடு முழுவதும் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது ஒவ்வொரு நெடுஞ்சாலைகளையும் பொறுத்து மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

 பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை

பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை

அதேபோல் கர்நாடகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி பெங்களூர் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலும் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூர்-மைசூரு இடையே புதிதாக 10 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழிகள் நெடுஞ்சாலைகளுக்கு, 4 வழிகள் சர்வீஸ் ரோடுகளாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையை கடந்த மாதம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் பெங்களூர்-மைசூரு இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறைந்துள்ளன.

டோல் கட்டணம் உயர்வு

டோல் கட்டணம் உயர்வு

இந்நிலையில் தான் தற்போது பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வகை வாகனங்களுக்கான டோல் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி(Single)டோல் கட்டணம் ரூ.135 என இருந்த நிலையில் தற்போது ரூ.165 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கான இருவழி (Return) கட்டணம் ரூ.205ல் இருந்து ரூ.250 ஆக அதிகரித்துள்ளது.

பஸ்-லாரிகளுக்கான டோல்

பஸ்-லாரிகளுக்கான டோல்

மேலும் இலகுரகவாகனம் மற்றும் மினி பஸ்களுக்கான ஒருவழி கட்டணம் ரூ.220ல் இருந்து ரூ.270 ஆகவும், இருவழி கட்டணம் ரூ.330ல் இருந்து ரூ.405 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் பஸ் மற்றும் லாரிகள் ஒருவழி பயணத்துக்கான கட்டணம் ரூ.460ல் ரூ.565 எனவும், இருவழி கட்டணம் ரூ.690ல் இருந்து ரூ.850 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனரக வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.200 முதல் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டபோது டோல் கட்டணம் அதிகமாக உள்ளது என குற்றம்சாட்டி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் சாலை திறக்கப்பட்ட ஒரு மாதத்துக்கும் டோல் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+