பெங்களூர் வேண்டவே வேண்டாம்.. வெளியேறிய பெண் இன்ஜினீயர் போட்ட பதிவு.. கன்னடர்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் வேண்டாம் என்று அங்கிருந்து வெளியேறியது தான் 2025ம் ஆண்டில் நான் எடுத்த நல்ல முடிவு என்று பெண் இன்ஜினியர் பதிவு செய்துள்ளார். இதற்கு கன்னடர்கள் மற்றும் பெங்களூர் வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்கும் பெண் இன்ஜினியர் பதிலடி கொடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இன்று 2025ம் ஆண்டின் கடைசி நாளாகும். இன்று இரவு 2026ம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆங்கில புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் பலரும் 2025ம் ஆண்டில் தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

moving-out-of-bengaluru-was-the-bbest-decision-i-made-in-2025-says-techie

அந்த வகையில் ஸ்ரேயா என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று ஒரு பதிவு செய்தார். அதில் 2025ம் ஆண்டில் நான் எடுத்த சிறந்த முடிவு எதுவென்றால் பெங்களூர் நகரை விட்டு வெளியேறியது தான் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛2025ம் ஆண்டில் என்னுடைய சிறந்த முடிவு என்பது பெங்களூரை விட்டு வெளியேறியது தான். அங்கு பள்ளங்கள் நிறைந்த சாலைகள், குறைந்த தொலைவுக்கே அதிகப்படியான நேரம் எடுத்து பயணிக்க வேண்டி உள்ளது. அதேபோல் வாடகை கார் முன்பதிவு செய்ய காத்திருக்க வேண்டி உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் சுத்தமின்றி உள்ளது. உணவு மற்றும் சுகாதார வசதிகள் தரம் குறைவாக உள்ளது. அதேவேளையில் வாழ்க்கைக்கான செலவு என்பது அதிகமாக உள்ளது. நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். இங்கு வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை கூட மறந்துவிட்டேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கன்னடர்கள் மற்றும் பெங்களூர் வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ‛‛இந்த முடிவுக்கு தலை வணங்குகிறேன். இப்படி அனைவரும் சென்றால் பெங்களூர் மீண்டும் பழைய நிலைக்கு நல்ல நகரமாக மாறும்'' என்று கூறி சீண்டி உள்ளார். அதேவேளையில் இன்னொருவரோ, ‛‛உங்களுக்கு பெங்களூர் வெறும் வயிற்று பிழைப்புக்கானது. வேலை முடிந்தவுடன் பெங்களூரை குறை சொல்வதை இப்போது பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்'' என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

அதேவேளையில் இந்த சாப்ட்வேர் இன்ஜினியரின் பதிவுக்கு மற்றொரு தரப்பினர் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர், ‛‛நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பெங்களூரில் உள்ளது. இது நல்ல முடிவு'' என்று கூறியுள்ளார். இப்படி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று கமெண்ட்டுகள் குவிந்து வருவதால் இந்த பதிவு வைரலாக தொடங்கி உள்ளது.

அதேவேளையில் இந்த சாப்ட்வேர் இன்ஜினியரின் பதிவுக்கு மற்றொரு தரப்பினர் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர், ‛‛நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பெங்களூரில் உள்ளது. இது நல்ல முடிவு'' என்று கூறியுள்ளார். இப்படி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று கமெண்ட்டுகள் குவிந்து வருவதால் இந்த பதிவு வைரலாக தொடங்கி உள்ளதோடு விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

இதையடுத்து மீண்டும் ஸ்ரேயா ஒரு பதிவு செய்தார். அதில், ‛‛மக்கள் வெறுப்பை காட்டுவதில் விரைவாக செயல்படுகிறார்கள். ஆனால் பெங்களூரில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது அதனை எப்படி தீர்க்கலாம் என்று சிந்திக்க அவர்கள் நேரம் எடுப்பது இல்லை பிரச்சனைகளை பட்டியலிடுவது சரியான ஒன்று தான். ஆனால் பிரச்சனையை கூறும் நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

பிரச்சனைக்கான தீர்வு அல்லது விழிப்புணர்வு பற்றி யாரும் பேசுவது இல்லை. இப்போது நான் பெங்களூரில் இல்லை. என் மீது வெறுப்பை காட்டுவதால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு நகரை எடுத்து கொண்டால் அங்கு நிறையும், குறையும் இருக்கும். மேலும் அனைத்து நகரமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'' என பதிலடி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+