சொந்தமாக வீடு கூட இல்லையாம்! தேர்தலில் போட்டியிடும் மைசூர் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பெங்களூர்: கர்நாடாகாவில் உள்ள மைசூரு-குடகு தொகுதியில் பாஜக சார்பில் மன்னர் யதுவீர் போட்டியிடுகிறார். மைசூர் மன்னர் என்பதால் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.4.99 கோடி என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அவருக்கு சொந்த வீடு கூட இல்லையாம்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தற்போது வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடாகாவில் உள்ள மைசூரு-குடகு தொகுதியில் பாஜக சார்பில் மன்னர் யதுவீர் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பை குறிபிட்டு இருக்கிறார். மைசூர் மன்னர் என்பதால் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.4.99 கோடி என குறிப்பிட்டுள்ளார். மேலும் சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் உள்ள 2 வங்கி கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளது. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாம்.
ஆனால் மன்னராக இருந்தாலும் தனக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக வங்கிகளில் கடன் பெறவில்லை என்றும், வருமானவரி பாக்கி இல்லை எனவும், தன் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் மன்னர் யதுவீர் தெரிவித்துள்ளார். அவரது மனைவி திரிஷிகா குமாரி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications