பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்கிறது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்! கர்நாடக அரசு எடுத்த முடிவு
பெங்களூர்: கர்நாடகாவில் மாநில அரசுக்குச் சொந்தமான நந்தினி பிராண்ட் பாலின் விலை லிட்டருக்கு ₹ 3 உயர்த்தப்படலாம் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பாலின் விலை மிகவும் முக்கியமானது. அனைத்து தரப்பினரும், குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தரப்படும் முக்கிய உணவாகப் பால் இருப்பதால் அதன் விலை மிக அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால், கடந்த சில காலமாகவே பாலின் விலையைப் பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அதேநேரம் மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பால் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை.
நந்தினி: தமிழ்நாடு அரசை பொறுத்தவரை அரசின் ஆவின் நிறுவனம் பால் விற்பனையைச் செய்து வருகிறது. அதேபோல கர்நாடகாவில் கர்நாடகா பால் கூட்டமைப்பு நந்தினி நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கேஎம்எஃப்- கர்நாடகா பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி பிராண்ட் பால் விற்பனையைச் செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் விலையைக் காட்டிலும் அரசு நிறுவனங்களின் பால் விலை குறைவு என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதையே வாங்குகிறார்கள்.
இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நந்தினி பிராண்ட் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. சமீப்தில் அங்கு நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கூட்டுறவு அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நிலைமையை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கேஎம்எஃப் தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை: கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் கர்நாடகா பால் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பீமா நாயக் மேலும் கூறுகையில்,, "மாவட்ட பால் கூட்டுறவுச் சங்கங்களும், கேஎம்எப் நிறுவனமும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த வேண்டும் கோரிக்கை விடுத்தோம்.
லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார், மேலும் விற்பனை விலை உயர்வின் முழு நிதிப் பலனையும் பால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் வலியுறுத்தினோம். பால் விலையுடன் சேர்ந்து பால் பொருட்கள் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் கோரிக்கை விடுத்தோம்.. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவெடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
பால் விலை: இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணாவும் கலந்து கொண்டார். பால் விவசாயிகளின் நலனைக் காக்கப் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நந்தினி பால் விலை லிட்டருக்கு ₹ 3 உயர்த்தப்பட்டது. அப்போது பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த விவகாரத்தில் தலையிட்டு, விலை உயர்வை லிட்டருக்கு 2 ரூபாயாக மாற்றியமைத்தார்.
அந்த விலை உயர்வு இருந்த போதிலும், கர்நாடகாவில் மற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நந்தினி பால் விலை குறைவாகவே இருக்கிறது.. கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்களின் பால் விலை ரூ 48 முதல் ரூ 52 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications