கர்நாடகாவில் கரையேறுமா காங்கிரஸ்.! வந்து விழுந்த கேள்வி.. சரத் பவார் சொன்ன பதிலை பாருங்க.. அடடே
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது தொடர்பாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது.. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான்.

இதன் காரணமாக அங்கே தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அடுத்த மாதம் அங்கே தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகிறது.
கர்நாடக தேர்தல்: கர்நாடக தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பாஜக முயன்றாலும், இப்போது வரை வந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிராகவே இருந்துள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று பல சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில சர்வேக்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை வெல்லும் கூறப்பட்டுள்ளது. இது சித்தராமையா, டிகே சிவக்குமார் தலைமையில் இயங்கும் கர்நாடக காங்கிரசுக்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளது.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்குத் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் அளித்த பேட்டியில், கர்நாடக தேர்தல் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருப்பதாக சரத் பவார் தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக முதலில் 2008இல் ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆட்சியைப் பிடிக்க எடியூரப்பா பாஜகவுக்குப் பெரிதும் உதவினார். ஆனால், இந்த முறை எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் பாஜக தேர்தலைச் சந்திப்பதும் அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் வெல்லும்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த சரத் பவார், பாஜக தனது பிரச்சாரங்களில் மாநில பிரச்சினைகளுடன் தேசிய பிரச்சினைகளை இணைத்தாலும் கூட கர்நாடகா தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல்களை நாம் இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும்.. மத்திய அரசுக்கான தேசிய தேர்தல் ஒன்று, மாநிலங்களுக்கான தேர்தல் மற்றொன்று. இது எனது தனிப்பட்ட கருத்து.. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.
அதேநேரம் மாநிலத் தேர்தலை நாம் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை.. கர்நாடகாவில் இப்போது தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கே காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பாக இருக்கிறது. மத்தியிலும் பாஜக ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மாநிலங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமென்றாலும் ஆட்சியில் வெல்லலாம். அது ஒவ்வொரு மாநிலத்தின் கள நிலவரத்தைப் பொறுத்து மாறும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் சரி, மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் வெல்ல வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
மாநில தேர்தல்கள்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி, கமல்நாத் முதலமைச்சராக இருந்தபோதும், எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது.. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்கள் பாஜக அல்லாத அரசுகளே ஆட்சியில் இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டே ஆக வேண்டும்..
இல்லையெனில் பாஜகவைத் தோற்கடிப்பது கடினம்.. அடுத்து வரும் 2024இல் தேர்தலில் பாஜகவை நிராகரிப்பது மிகவும் கடினம். எதிர்க்கட்சிகள் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும்.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணையவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது. மகாராஷ்டிராவில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இருப்பினும், சில காலம் மட்டுமே அந்த கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டணி அரசில் இருந்து விலகி, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications