"ரொம்ப ஓவர்!" தவழும் குழந்தைக்கு தொழில்முனைவோர் வகுப்பாம்! பெங்களூரில் மழலையர் பள்ளியில் இதை பாருங்க
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மழலையர் பள்ளி ஒன்றின் முன்பு இருந்த விளம்பரம் நெட்டிசன்களை ஷாக் ஆக வைத்துவிட்டது. நெட்டிசன்கள் இதைப் பார்த்துக் கொந்தளித்தாலும் பெங்களூரில் இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.!
நமது நாட்டின் ஐடி தலைநகராக நகரம் என்றால் அது பெங்களூர் தான். உலகளவில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் ஸ்டார்ட்அப் மையாகவும் பெங்களூர் இருக்கிறது.

இருப்பினும், பெங்களூரில் நடக்கும் சில விஷயங்கள் எல்லாம் ஏதோ வெளிநாட்டில் நடப்பதைப் போலவே இருக்கும். இந்தியாவில் வேறு எங்கும் நீங்கள் பார்க்கவே முடியாத பல வினோத சம்பவங்கள் எல்லாம் பெங்ககளூரில் நீங்கள் பார்க்கலாம்.
விளம்பரம்: இதை ஏதோ மிகைப்படுத்திச் சொல்வதாக நினைக்க வேண்டாம். ஒன்றுமே இல்லை.. அங்கே சாலைகளைப் பார்த்தாலே என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குப் புரியும். நெரிசல் மிகுந்த சாலைகளில் நடுரோட்டில் சாப்பிடுவது, வேலை செய்வது என்று பல வினோதங்களைப் பார்க்கலாம். அப்படியொரு வினோத சம்பவம் தான் மீண்டும் பெங்களூரில் நடந்துள்ளது. ஆனால், இது அத்தனையையும் தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கிறது. அங்கே மழலையர் பள்ளிக்கு அருகே இருந்த விளம்பரம் ஒன்று தான் இணையத்தில் டிரெண்டானது.
இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.. ஆனால், பெங்களூர்வாசிகளோ.. இதெல்லாம் பெங்களூரில் வழக்கமான ஒன்றுதான் என்று கூலாக சொல்கிறார்கள். அப்படி என்ன தான் என இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம். அதாவது அங்கே மழலையர் பள்ளிக்கு முன்பு தொழில் முனைவோர் கிளாஸ் திட்டம் (தொழில் முனைவோர்) திட்டம் குறித்த விளம்பரம் இருந்துள்ளது.
இதெல்லாம் ஓவர்: இது தொடர்பான படத்தைப் பகிர்ந்த அந்த நெட்டிசன், "மழலையர் பள்ளிக்கு முன்பு தொழில் முனைவோர் கிளாஸ் குறித்த விளம்பரம்.. இதையெல்லாம் நாம் பெங்களூரில் மட்டுமே பார்க்க முடியும்" என்று ட்வீட் செய்துள்ளார். இதை நெட்டிசன்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மழலையர்களுக்குத் தொழில் முனைவோர் கிளாஸ் எல்லாம் நிஜமாகவே ரொம்ப ஒவர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
சரியாக நடக்கக் கூட தெரியாத குழந்தைகளுக்குத் தொழில்முனைவோர் வகுப்பு எல்லாம் தேவையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து நெட்டிசன் ஒருவர், "பெங்களூரில் இருக்கும் பல மழலையர் பள்ளிகள் உண்மையில் ஒரு ஸ்டார்ட்அப்களை போல தான் இருக்கின்றன. நம்மிடம் இருந்து புதிது புதிதாகப் பணத்தை வாங்க என்னவெல்லாம் வழி என்பது குறித்தே அவர்கள் எப்போதும் யோசிக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பெற்றோர்கள்: எப்போதும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த படிப்பைத் தர வேண்டும் என்பதே இந்தியர்களின் மனநிலை. இதன் காரணமாகவே மழலையர் வகுப்பு முதல் காலேஜ் வரை அனைத்திற்குமே அதிகம் செலவிடப் பெற்றோர் ரெடியாகவே இருப்பார்கள். இருப்பினும், சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து ஏதேதோ சொல்லி வசூல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளின் நலனை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications