அசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை
பெங்களூர்: தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் என்ற சர்வதேச நிறுவனம் பெங்களூரில் 'கோவிட் -19' பரிசோதனைக் கருவியை தயாரிக்கவுள்ளது.
கோவிபாத் (CoviPath) என்று பெயரிடப்பட்ட இந்த கிட், ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கான கருவியாகும். இந்தியாவில் இந்த வகை சோதனைகள்தான் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஆகியோரால் எம்.டி.ஆர் 2017 விதிகளின் கீழ் கோவிபாத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான, தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிர்வாக இயக்குனர் அமித் சோப்ரா கூறுகையில், பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் தங்களின் புதிய உற்பத்தி பிரிவு துவங்குகிறது, ஒவ்வொரு மாதமும் 1 கோடி பரிசோதனை கிட்களை உருவாக்க முடியும்.
"உலகளாவிய தரத்தை பராமரிக்கும் அதே நேரத்தில் மலிவு விலையில் சோதனை கருவிகளை வழங்க நாங்கள் கருவியாக இருப்போம்" என்று சோப்ரா கூறினார்.
இந்த கருவிகள் இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன என்று அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியது.
இருப்பினும், தடுப்பூசி புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில், ஒரு புதிய சோதனைக் கருவி தேவையா என்று சோப்ராவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த சோதனை, கொரோனா அறிகுறி அல்லது அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண உதவும். இதனால் ஆரம்பத்திலேயே பரவலைக் கட்டுப்படுத்துகிறது. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாகத் திறக்கப்படும்போது, வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நிலையான சோதனை யுக்தி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்" என்று அவர் கூறினார்.
கோவிபாத் துல்லியத்தன்மையுடன் செயல்படும் என்று கூறப்படுகிறது. அதாவது இது 99.5% க்கும் அதிகமான துல்லியத்தன்மையோடு இருக்குமாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications