பெங்களூர் பர்பிள் லைன் மெட்ரோ பணிகள்.. பிளானில் திடீர் மாற்றம்.. ஒயிட்பீல்டுடன் இணைப்பது எப்போது?
பெங்களூர்: பெங்களூர் ரயில் திட்டத்தில் பர்பிள் லைன் வழித்தடத்தில் மிஸ்ஸிங் லிங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மாற்றம் வந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நம்ம மெட்ரோ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரும் உள்ளது.

இதனால்தான் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை, பயணிகள் ரயில் சேவை என கொண்டு வரப்படுகின்றன. ரயில் பயணத்தை இலகுவாக்கினால் மக்கள் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு கூலாக மெட்ரோவில் பயணிக்கலாம். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படாது.
இதனால்தான் இந்த ஏற்பாடு. மேலும் இது போன்று பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கும் பாதிப்புகளும் மிகவும் அரிதானது. இதனால் இந்த பொது போக்குவரத்தான மெட்ரோ, ரயில் சேவைகள் பாதுகாப்பை கொடுக்கின்றன.அந்த வகையில் பெங்களூரில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நகரத்தில் பர்பிள் லைன், கிரீன் லைன் என இரு விதமான வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடர்ந்து மஞ்சள் லைன், பிங்க் லைன், நீல லைன் எனப்படும் ப்ளூ லைன் என்ற 3 வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதே வேளையில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வரும் பர்பிள் லைன், கிரீன் லைன் நீட்டிப்பு பணிகளும் நடக்கின்றன.
பர்பிள் லைானது பையப்பனஹள்ளி டூ கெங்கேரி வரை இயக்கப்படுகிறது. இதுதவிர கே.ஆர்.புரம் டூ ஒயிட் ஃபீல்டு வரை ஒரு பிட்லைன் இயங்கி வருகிறது. மேலும் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை பர்பிள் லைனில் நீட்டிக்கும் பணிகள் நடக்கின்றன. பர்பிள் லைன் வழித்தடத்தில் மேலே உள்ள மிஸ்ஸிங் லிங்குகளை இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக துரிதமாக நடந்து வருகிறது.
இந்த மிஸ்ஸிங் லிங்குகள் இணைக்கப்பட்டால் பர்பிள் லைன்43 கி.மீ. தூரத்திற்கு இருக்கும். இந்த பர்பிள் லைன் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கண்ட இணைப்பு திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. அதாவது கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி இணைப்பில் பாதுகாப்பு சார்ந்த ஆய்வுகள் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதனால் நேற்று கே.ஆர்.புரம் டூ கருடாசார்பால்யா வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் இணைப்பு இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிந்து விடுமா என கேட்டதற்கு அதிகாரிகள் அதை உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் கெங்கேரி டூ சல்லகட்டா இணைப்பில் ஆய்வு பணிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முதலில் கே.ஆர்.புரம் டூ பையப்பனஹள்ளி இணைப்பு வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் கெங்கேரி டூ சல்லகட்டா வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும். ஒயிட்பீல்டு லைனை கே.ஆர்புரம் டூ பையப்பனஹள்ளி வழித்தடத்தில் இணைக்க கோரிக்கைகள் வருகின்றன. இது மட்டும் நடந்துவிட்டால் 60 ஆயிரம் பேர் கூடுதலாக மெட்ரோவை பயன்படுத்துவார்கள். ஆகஸ்ட் மாதம் வரை 6.3 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications