Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதை அதிகமானால் போலீசே வீட்டில் ‛டிராப்’ செய்வார்கள்! புத்தாண்டையொட்டி பெங்களூரில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் போதை அதிகமாகி நடக்க முடியாதவர்கள் பூத்களில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் முகவரி கேட்டு வீடுகளில் ‛டிராப்’ செய்யப்படுவார்கள் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:

இன்றுடன் 2025ம் ஆண்டு விடைபெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2026ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை வரவேற்க பெங்களூரில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம்.

new-year-celebration-what-are-the-restrictions-in-bengaluru-city-people-be-should-known-this

குறிப்பாக பெங்களூரில் உள்ள சர்ச் தெரு, எம்ஜி ரோடு, பிரகேட் ரோடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடி ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள். மேலும் பப்புகள், பார்களில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தான் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* அதன்படி பெங்களூர் நகரில் மொத்தம் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

* பெங்களூர் நகர் முழுவதும் 2,432 போக்குவரத்து போலீசார், 400 டிராபிக் வார்டன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு ரெடிடென்சி ரோடு, ரெஸ்ட் ஹவுஸ் ரோடு, செயின்ட் மார்க்ஸ் ரோடு, மியூசியம் ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஏரியாக்களில் மாலை 4 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மால் ஆஃப் ஆசியா, போனிக்ஸ் மால், ஓரியன் மால், பப்புகளின் அருகே உள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் தங்களின் வாகனங்களை யுபி சிட்டி, கருடா மால், சிவாஜி நகர் பிஎம்டிசி வளாகம், காமராஜ் ரோடு உள்ளிட்ட இடங்களில் நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்லலாம். மேலும் கோரமங்களா, இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து மாற்றம், வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நகரில் உள்ள 50க்கும் அதிகமான மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் ரோடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது.

* பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதனை மீறி, வீலிங், வேகமாக வாகனம் ஓட்டுவது, சாகசம் செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

* யாராவது விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் பொதுமக்கள் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் மதுபானம் குடித்து வாகனங்கள் ஓட்டக்கூடாது. மீறி வாகனங்கள் ஓட்டினால் அதனை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.

* பெங்களூர் நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டுபிடித்து அவர்கள் இளைப்பாற 15 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிகமாக வைக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்.

* போதையில் வருவோருக்காக அமைக்கப்பட்டுள்ள பூத் பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூரில் அளித்த பேட்டியில், ‛‛போதை அதிகமாகி நடக்க முடியாமல் இருப்பவர்கள் போலீஸ் பூத்களில் வைக்கப்படுவார்கள். அவர்களின் முகவரி கேட்டு பத்திரமாக வீட்டில் ‛டிராப்' செய்யப்படுவார்கள். இது அனைவருக்கும் பொருந்தாது. பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது'' என்றார்.

* புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பிஎம்சிடி பஸ் சேவைகள் அதிகாலை 3 மணி வரை பல்வேறு முக்கிய இடங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

* அதேபால் பெங்கூளர் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஒயிட்பீல்டு - சல்லகட்டா சேவை 1.45 மணி வரையும், சல்லகட்டா - ஒயிட்பீல்டு சேவை 2 மணி வரையும், மாதவரா - சில்க் இன்ஸ்ட்டியூட் சேவை 2 மணி வரையும், ஆர்வி ரோடு - பொம்மச்சந்திரா சேவை 3.10 மணி வரையும், பொம்மசந்திரா - ஆர்வி ரோடு சேவை 1.30 மணி வரையும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

* பர்பிள், பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை 8 நிமிடத்துக்கு ஒருமுறையும், மஞ்சள் வழித்தடத்தி்ல 15 நிமிடத்துக்கு ஒருமுறையும் இயக்கப்பட உள்ளது. எம்ஜி ரோடு மெட்ரோ ஸ்டேஷனில் இரவு 10 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி கிடையாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+