சாக்கடையை திறந்துவிட்டு.. தென்பெண்ணையை நஞ்சாக்கிய பெங்களூர்! கர்நாடகாவை கண்டித்த பசுமை தீர்ப்பாயம்
பெங்களூர்: பெங்களூருலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தமிழ்நாட்டின் தென்பெண்ணை ஆற்றை தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கர்நாடகா அரசை கண்டித்திருக்கிறது. மட்டுமல்லாது கழிவுநீரை வெளியேற்றியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிக நீளமான ஆறுதான் தென்பெண்ணை. கர்நாடகாவின் நந்தி மலையில் உருவாகி, அனேகல், ஓசூர், செங்கம் போன்ற தொழிற்துறை மையங்கள் வழியாக இது பாய்கிறது. தமிழ்நாட்டிற்குள் ஐந்து மாவட்டங்களில் பாசனம், குடிநீர், மற்றும் தொழில்களுக்கு ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. ஆனால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்துறை கழிவுகளால் இது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை பொங்கி வழிவது வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் பெங்களூரிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத நச்சு கழிவுநீர்தான்.
பெங்களூருவின் பெல்லந்தூர், அகரா, மற்றும் வர்த்தூர் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் நுரை கலந்த நீர், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியை மாசுபடுத்துவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை தொடர்ந்து கூறி வருகிறது. இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும் சோக்கரசன்பள்ளி கிராமத்திலும், ஆற்றின் அடிப்பகுதியிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது. ஆய்வில், ஆற்றில் அதிக மலக்கழிவுகள் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மேலும், ஆற்று நீர் குளிப்பதற்கு உகந்ததல்ல என்றும் அது கூறியுள்ளது.
இதன் பிறகுதான் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் 1,329 MLD கழிவுநீர் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் உறுப்பினர் அப்ரோஸ் அகமது ஆகியோர் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர். அதாவது 1,329 MLD கழிவுநீரை வெளியேற்றியதற்காக கர்நாடகாவை கண்டித்துள்ள நடுவர்கள், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பிரச்சனையை சரி செய்ய நீண்ட கால தீர்வு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் வரை, நச்சு நுரை வெளியேற்றத்தை தடுக்க உடனடி மற்றும் கடுமையான இடைக்கால நடவடிக்கைகளை தேவை என்று தங்களது உத்தரவில் நடுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனையை சரி செய்ய கர்நாடக அரசுடன் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், ஹெப்பல் உள்ளிட்ட பகுதியில் 225 MLD மொத்த கொள்ளளவு கொண்ட 12 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து வருகிறோம் என்றும், இவற்றில் நான்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும், 6 நிலையங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும், 1 நிலையம் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும் செயல்பாட்டுக்கு வரும் எனவும், இதன் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவது தவிர்க்கப்படும் எனவும் கூறியிருக்கிறது.
தவிர, இடைக்கால நடவடிக்கையாக, கர்நாடகா, பைதரயனபுரா, பொம்மனஹள்ளி, மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் 800 கிமீ நிலத்தடி வடிகால் குழாய்களை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கணக்குகள் எல்லாம் ஓகேதான். ஆனால் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை போல கர்நாடக அரசு நச்சு கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதை எப்போது முழுமையாக நிறுத்தும்? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications