தடுக்கப்பட்ட விவசாயி.. அழுக்கு உடை அணிந்தால் மெட்ரோவில் அனுமதி இல்லையா? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் விவசாயி ஒருவர், அவரது அழுக்கு உடையின் காரணமாக மெட்ரோ ரயிலில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம்(NHRC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கடந்த 26ம் தேதி காலை வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. பயணிகளோடு பயணிகளாக வயதான விவசாயி ஒருவர், தலையில் மூட்டையுடன் அழுக்கு படிந்த ஆடையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தனது பயணத்திற்கான டிக்கெட்டை பெற்ற அவர், ரயிலில் ஏறுவதற்கு நடைமேடை நோக்கி நகர்ந்திருக்கிறார். இடையில் பாதுகாப்பு செக்கிங் இருந்திருக்கிறது. அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த மேற்பார்வையாளர், விவசாயியை ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

NHRC has sent a notice to the Karnataka government regarding the denial of entry to the farmer in the metro rail

முறையான செக்கிங்கிற்கு பின்னரும் கூட அவர் ரயில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து சக பயணி, பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும், விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. விவசாயி கன்னட மொழி தெரியாமல், டிக்கெட் இருந்தும் ரயில் ஏற முடியாமல் தயங்கி நிற்பதும், மேற்பார்வையாளர் அவரை அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக இருந்ததும் சக பயணிகளிடையே ஆவேசத்தை எழ செய்தது.

இதனையடுத்து மற்றொரு பயணியும், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ய, இறுதியாக விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனையடுத்து, விவகாரம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து, விவசாயியை அனுமதிக்காத மெட்ரோ ரயில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி, கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஒருவருடைய உடையை அடிப்படையாக வைத்து யாருக்கும் போக்குவரத்து மறுக்கக்கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளிக்கும் பதில் அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக குறிப்பிட வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+