பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு! டார்க் வெப், கிரிப்டோகரன்சி.. பயங்கரவாதிகள் ஹைடெக் ப்ளான்
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றவாளிகள் டார்க்வெப், கிரிப்டோகரன்சி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் மிக புகழ் பெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் பரபரப்பான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து களத்தில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணையை துவக்கியது.கோவை கார் குண்டு வெடிப்பு, கேரள சர்ச் குண்டுவெடிப்புக்கு பிறகாக நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ தீவிர கவனம் செலுத்தி விசாரணையை நடத்தி வந்தது.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள் உட்பட 10 பேர் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதை அடுத்து இந்த வழக்கானது பெங்களூரு காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குண்டுவெடிப்பில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளோடு, குண்டை வைத்து சென்றவரின் புகைப்படங்களும் வெளியாகின. குற்றவாளிகள் தொடர்ந்து மறைவாக இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
அதன்படி கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசபீர் உசேன் - அப்துல் மதீன் தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. முசாபீர் உசேன் குண்டுவைத்ததாகவும், அப்துல் மதீன் திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் என்.ஐ.ஏ அறிவித்தது. தொடர்ந்து போலிஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் மூலம் கிரிப்டோகரண்சி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் குண்டுவெடிப்பு நடத்த இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இருவரும் மாறி மாறி தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் கொல்கத்தா அருகே இருவரும் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய திருப்பு முனையாக இவ்வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
அதில், ஐடிபிஎல் பெங்களூரு, புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நடந்த ஐஇடி குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய NIA, பல்வேறு மாநில போலீஸ் படைகள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பல தொழில்நுட்ப மற்றும் கள விசாரணையை நடத்தியது. விசாரணையில் வெடிகுண்டு வைத்தவர் ஷாசிப் என்பது தெரியவந்தது. ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 42 நாட்களுக்குப் பிறகு, மேற்கு வங்காளத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்ப சதி செய்திருந்தனர். அவர்களோடு மாஸ் முனீர் அகமது மற்றும் முஸம்மில் ஷரீப் போன்ற இளைஞர்களும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
தாஹாவும் ஷாசிப்பும் இந்திய சிம் கார்டுகள் மற்றும் இந்திய வங்கிக் கணக்குகளை மோசடியாகப் பயன்படுத்தி, டார்க் வெப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பல்வேறு இந்திய மற்றும் வங்காளதேச அடையாள ஆவணங்களையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான முகமது ஷஹீத் பைசலுக்கு முன்னாள் குற்றவாளி சோயிப் அகமது மிர்சா மூலம் தாஹா அறிமுகப்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
அல்-ஹிந்த் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மெஹபூப் பாஷாவிற்கும், ஐஎஸ்ஐஎஸ் தென்னிந்தியாவின் அமீர் காஜா மொஹிதீனுக்கும், பின்னர் மாஸ் முனீர் அகமதுவிற்கும் தாஹா தனது கூட்டாளியான பைசலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இவர்களுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் அவர்களின் நிதியுதவி அளிக்கப்பட்டதோடு, டெலிகிராம் போன்ற ரகசிய தளங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 22 ஜனவரி 2024 அன்று அயோத்தியில் சிலை பிரதிஷ்டா விழா நடந்த அதே நாளில் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு தோல்வியடைந்த நிலையில், குற்றவாளிகள் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பை திட்டமிட்டது தெரிய வந்ததாகவும், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications