பெரிய சதி.. பெங்களூரில் 6 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை.. சிக்கிய ஆவணங்கள்-பணம்.. திடுக்கிடும் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருந்தவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட வைத்த வழக்கு தொடர்பாக 6 இடங்களில் இன்று என்ஐஏ அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் பல இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது 7 கைத்துப்பாக்கி, 4 கையெறி குண்டு, 45 தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது முகமது உமர், முகமது பைசல் ரபானி, தன்வீர் அகமது, முகமது பாரூக் மற்றும் ஜூனைத் அகமது உள்ளிட்டோருக்கு லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது இவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது டி நசிர் என்பவருடன் தொடர்பில் இருந்தார்.
டி.நசீர் என்பவர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் அவர்கள் 5 பேரையும் மூளைச்சலவை செய்து பயங்கவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை என்பது என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் தான் என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரில் 6 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூரில் 6 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை குறித்து என்ஐஏ அதிகாரிகள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரில் 6 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் டீ.நசீர் என்பவரின் தொடர்பு மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாதிகளாக மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. முகமது உமர், முகமது பைசல் ரபானி, தன்வீர் அமது மற்றும் முகமது பாரூக் மற்றும் தலைமறைவாக உள்ள ஜூனைத் அகமது ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இவர்கள் சேர்ந்து பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்பட்டது. இதுவும் சோதனைக்கு காரணமாகும். தற்போது இந்த சோதனையின் முடிவில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், ரூ.7.3 லட்சம் ரொக்கப்பணம், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications