ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு? சிக்கிய முக்கிய புள்ளி.. நெருங்கும் என்ஐஏ
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் அமைந்துள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எதற்காக குண்டு வெடிக்க வைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர்கள் இருவர் தற்போது பிடிபட்டிருக்கிறார்கள்.
இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
“கடந்த 2022ம் ஆண்டு மங்களூரில் ஆட்டோ ரிக்ஷாவில் இதேபோன்று குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தின் போது நாங்கள் 'கர்னல்' என்கிற பெயரை கேள்விப்பட்டோம். இப்போது நாங்கள் கைது செய்திருக்கும் அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் இருவரும் கர்னலுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். கர்னல் மத்திய கிழக்கில் இருந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சொல்வதெனில் அபுதாபியிலிருந்து இயங்கி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும் தொடர்ப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது” என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேபோல தென்னிந்தியாவில் வழிப்பாட்டு தலங்கள், குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்த தேவையான நிதியை கர்னல் என குறிப்பிடப்படும் நபர் கிரிப்டோ பணமாக அனுப்பி வைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications