எல்லாத்துக்கும் என்கிட்ட வீடியோ இருக்கு.. நெத்தியடி இல்லை.. நித்தியடி தருவோம்.. நித்தியானந்தா அதிரடி
பெங்களூர்: "என் மேல பாலியல் புகாரா தர்றீங்க? எல்லாத்துக்கும் என்கிட்ட வீடியோ இருக்கு.. பல விஷயங்களில் ஜெயித்தவன் நான்.. நெத்தியடி இல்லை.. நித்தியடி தர சீடர்கள் முன்வர வேண்டும்" என்று பஞ்ச் வசனங்களுடன் நித்தியானந்தா புதிதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி உள்ள நித்யானந்தாவை, நம் போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர். இன்டர்போல், சிபிஐ உதவியுடன் விரைவில் கைது செய்வோம் என்றும் கர்நாடக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று நித்யானந்தாவே வீடியோ வெளியிட்டு சவால் விடுத்துள்ளார். இதை தவிர தினம் ஒரு வீடியோவும் வெளியாகி வருகிறது.
ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லி ஆச்சரியத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தன் மீதான பாலியல் புகார் சம்பந்தமாக நித்யானந்தா புதிய வீடியோவில் பேசியுள்ளார். இவர்மீது கடத்தல், பாலியல் வழக்குகள் உள்ள நிலையில், இதை பற்றி நித்யானந்தாவே பேசிஉள்ளார்..
"பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்த சமயத்தில், அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை.. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர். 2002-ல் இருந்து என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோவாக பதிவாகி உள்ளது.
அதனால் என் மீதான பாலியல் புகார்கள் தந்தாலும் அவை, எடுபடாமலேயே போய்விடும். அப்படி யாராவது பாலியல் புகார் தந்தால், 2002-க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என்று புகார் கொடுங்கள்.
நான் எத்தனையோ விஷயங்களில் ஜெயித்த போராளி... நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற டிரண்ட் உருவாகி விட்டது.. என் சீடர்கள் நித்தியடி தர வேண்டும்" என்று அதிர வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications