எல்லாவற்றுக்கும் கன்னடமா? பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்த பெண்! என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகாவில் கன்னடம் பேசும் உள்ளூர்காரர்களுக்கு தான் இடஒதுக்கீடு என்ற பஞ்சாயத்து இப்போது தான் முடிந்துள்ள நிலையில் பெண் ஒருவர், ‛‛பெங்களூரில் ஆங்கிலம், இந்தி பேசுவது இல்லை. இதனால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தேன்'' எனக்கூறியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகா தலைநகர் பெங்களூர் என்பது நம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இங்கு கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பெங்களூரில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் இருப்பது தான். இந்நிலையில் தான் பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் கன்னடம் பேசும் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி நிர்வாக பிரிவுகளில் 50 சதவீதம் பேரும், நிர்வாகம் அல்லாத பிரிவில் 75 சதவீதம் பேரும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவீதம் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தான் பணி வழங்க வேண்டும் என்பதற்கான மசோதாவிற்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது பிற மாநிலத்தவரின் வேலையை பறிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த மசோதா என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் தான் பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு என்பது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த பதிவை செய்திருப்பவர் ஷானி நானி. இவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது: நான் பெங்களூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்தேன். பஞ்சாபில் திருமணம் செய்து கொண்டேன். எனது பாரம்பரியத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் சூடா (கையில் வளையல் போன்று அணியும் அணிகலன்) அணிந்தேன். இதன்மூலம் நான் வடஇந்தியாவை சேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். மேலும் பெங்களூரில் நான் கன்னடம் கற்று கொண்டிருந்தேன்.
நான் ஃபிளாட்டில் இருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அப்போது என்ன கொடுமை நடந்தது என்றால் கன்னடம் தெரியாத என்னிடம் கன்னடத்தில் பேசி அதிக பணம் கேட்டனர். எனக்கு இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்தது. ஒருமுறை நான் மின்தடை தொடர்பாக பெஸ்காமை(மின்வாரியம்) தொடர்பு கொண்டேன். அப்போது பேசிய நபர் இந்தி, ஆங்கிலத்தில் பேச வேண்டாம் கன்னடத்தில் மட்டும் பேசுங்கள் என்றார். இதன்மூலம் கன்னடா பேசுவோரின் குறைகளை மட்டும் அவர் கேட்க விரும்புகிறார். இதனால் நான் அங்கிருந்து வெளியேறும் மனநிலைக்கு வந்தேன்'' என தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது. சிலர் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் எதிர்கொண்ட சம்பவங்களை கூறி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்போ கர்நாடகா வந்தால் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications