மாரடைப்பால் ரோட்டில் துடித்த கணவர்.. லிப்ட் கேட்டு மனைவி கதறியும் உதவாததால் பலியான சோகம்.. துயரத்திலும் கண் தானம்
பெங்களூர்: பெங்களூரில் உடல்நலக்குறைவால் மனைவியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 34 வயது இளைஞருக்கு நடுவழியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாலையில் விழுந்து துடித்தார். இதனை பார்த்து கலங்கிய மனைவி, அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து மருத்துவமனைக்கு ‛லிப்ட்' கேட்டு கதறினார். ஆனால் எந்த வாகன ஓட்டிகளும் காரை நிறுத்தவில்லை. இதனால் அந்த இளைஞர் பரிதாபமாக இறந்தார். இந்த சோகத்திலும், மனிதநேயம் மரித்துப்போனாலும் கூட அந்த இளைஞரின் கண்களை குடும்பத்தினர் தானமாக கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.
பெங்களூர் பனசங்கரி 3வது ஸ்டேஜ் பகுதியில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடரமணன் (வயது 34). இவர் மெக்கானிக் ஆவார். இவரது மனைவி பெயர் ரூபா. கடந்த 14ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி ரூபா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலையில் சுமார் 3.30 மணிக்கு திடீரென்று வெங்கடரமணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் தனது மனைவி ரூபாவை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர் யாரும் இல்லை.
இதனால் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு வெங்கடரமணனுக்கு இசிஜி செய்யப்பட்டது. அதில் அவர் மாரடைப்பு இருப்பதும் உடனடியாக ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு செல்லும்படியும் கூறினர். அங்கிருந்து ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
இதனால் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். கதிரேனஹள்ளி பாலம் அருகே வெங்கடரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். வெங்கடரமணன் உயிருக்கு போராடினார். மாரடைப்பால் சாலையில் துடிதுடித்தார்.
இதனால் ரூபா சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து ‛லிப்ட்' கேட்டார். அதிகாலை நேரம் என்பதால் எந்த வாகன ஓட்டிகளும் ‛லிப்ட்' கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ரூபா, வெங்கடரமணனின் தங்கைக்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கிடையே தான் ஒரு கார் டிரைவர் காரை நிறுத்தினார். வெங்கடரமணன், அவரது மனைவி ரூபா, தங்கை உள்ளிட்ட 3 பேரும் ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு சென்றனர்.
No Ambulance, No Help, No Humanity: A Death That Questions Bengaluru
— Karnataka Portfolio (@karnatakaportf) December 16, 2025
In a deeply disturbing incident, Bengaluru witnessed a tragic collapse of both emergency care and basic human compassion. Venkataramanan, a 34-year-old mechanic from South Bengaluru, suffered severe chest pain… pic.twitter.com/I7Eb0m65hn
அங்கு வெங்கடரமணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ரூபா, வெங்கடரமணனின் தங்கை கதறி அழுதனர். தங்களுக்கு யாராவது உதவி செய்திருந்தால் வெங்கடரமணன் பிழைத்து இருப்பாரே.. யாரும் உதவி செய்ய முன்வரவில்லையே என்று கதறி அழுதனர். இது அனைவரையும் கலங்க வைத்தது.
இந்த துயர சம்பவத்துக்கு நடுவேயும் கூட வெங்கடரமணனின் குடும்பத்தினர், அவரது கண்களை தானமாக கொடுத்தனர். தங்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையிலும் வெங்கடரமணனின் குடும்பத்தினர் கண்தானம் செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதற்கிடையே தான் நடுரோட்டில் வெங்கடரமணன் மாரடைப்பால் உயிருக்கு போராடுவதும், அவரது மனைவி ரூபா வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோவை பார்க்கும் பலரும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகளை திட்டி வருகின்றனர். அவர்களின் மனிதாபிமானமற்ற செயலை கடுமையாக சாடி வருகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications