புதிய இந்தியாவுக்கு மதரஸாக்கள் தேவையில்லை.. அசாம் முதல்வர் "ஓபன் அட்டாக்".. அனல் பறக்கும் கர்நாடகா
ஹிமந்த சர்மாவின் இந்த பேச்சு கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
பெங்களூர்: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சர்மா கூறிய கருத்துகள் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
பாஜக உருவாக்கும் புதிய இந்தியாவில் மதரஸாக்கள் தேவையில்லை என அவர் பேசியிருப்பது கர்நாடகா முஸ்லிம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கென அரசியல் கட்சிகள் சில அரசியல் நிலைப்பாட்டை கையில் எடுக்கும். ஆனால், அது மற்ற மாநிலங்களில் செல்லுப்படியாகாது. அதேபோல்தான் ஹிமந்த சர்மாவின் பேச்சும் மாறியுள்ளது. இதை உணர்ந்த பாஜக தலைமை, கர்நாடகா

தரைமட்டமாக்கப்படும் மதரஸாக்கள்
அசாமில் முதல்வர் ஹிமந்த சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் சேர்ந்த ஹிமந்த சர்மா தான், அம்மாநிலத்தில் பாஜகவின் வெற்றி பெற முக்கிய காரணம் என்பதால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே, அசாமில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக அங்கு காட்சிகள் மாறின. அந்த வகையில், தற்போது அங்குள்ள மதரஸாக்கள் இடித்து தள்ளப்படுகின்றன. தீவிரவாதிகளின் புகலிடமாக மதரஸாக்கள் விளங்குவதால் அவை இடிக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம் அளித்துள்ளது. இது, முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமந்த சர்மா பேச்சு
இந்நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால் கர்நாடகா வளர்ச்சிப் பாதையில் வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறது.

"மதரஸாக்கள் தேவையில்லை"
இந்த புதிய இந்தியாவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் ஆகும். இந்த புதிய இந்தியாவுக்கு பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளே தேவை. மதரஸாக்கள் தேவை கிடையாது. அதனால்தான், அசாமில் நாங்கள் 600 மதராக்களை முடியுள்ளோம். மீதமுள்ள மதரஸாக்களும் மூடப்படும்" என்றார்.

முஸ்லிம்கள் அதிருப்தி
ஹிமந்த சர்மாவின் இந்த பேச்சு கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. முஸ்லிம் குழந்தைகளுக்கு மத போதனைகளை வழங்கும் மதரஸாக்கள் தேவையில்லை என அவர் கூறியது அங்கு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக உள்ளனர். ஆனால், ஹிமந்த சர்மாவின் இந்த பேச்சு அவர்களையே கோபம் அடையச் செய்துள்ளதாக தெரிகிறது. இதனை உணர்ந்த பாஜக தலைமை, கர்நாடகாவில் பேசும் போது அங்குள்ள அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்டு கருத்து தெரிவிக்குமாறு அக்கட்சியின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications