விவசாயி உடுத்தியிருந்த ஆடை டீசன்ட்டா இல்லையாம்.. பெங்களூர் மெட்ரோ ரயிலுக்குள் அனுமதி மறுப்பு
பெங்களூர்: விவசாயி ஒருவரை, அவரது அழுக்கு ஆடையை காரணம் காட்டி மெட்ரோ ரயிலில் ஏறக்கூடாது என தடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகரியை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
இன்ற காலை வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. பயணிகளோடு பயணிகளாக வயதான விவசாயி ஒருவர், தலையில் மூட்டையுடன் அழுக்கு படிந்த ஆடையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தனது பயணத்திற்கான டிக்கெட்டை பெற்ற அவர், ரயிலில் ஏறுவதற்கு நடைமேடை நோக்கி நகர்ந்திருக்கிறார். இடையில் பாதுகாப்பு செக்கிங் இருந்திருக்கிறது. அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த மேற்பார்வையாளர், விவசாயியை ரயில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

முறையான செக்கிங்கிற்கு பின்னரும் கூட அவர் ரயில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து சக பயணி கேள்வி பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும், விவசாயியை மேற்பார்வையாளர், ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை. விவசாயி கன்னட மொழி தெரியாமல், டிக்கெட் இருந்தும் ரயில் ஏற முடியாமல் தயங்கி நிற்பதும், மேற்பார்வையாளர் அவரை அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக இருந்ததும் சக பயணிகளிடையே ஆவேசத்தை எழ செய்தது.
இதனையடுத்து மற்றொரு பயணியும், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்ய, இறுதியாக விவசாயி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. இதனையடுத்து, விவகாரம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து, விவசாயியை அனுமதிக்காத மெட்ரோ ரயில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
போக்குவரத்து எளிதாக இருக்க வேண்டும்தான் மெட்ரோ போன்ற ரயில் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, மேட்டுக்குடி மக்களுக்கு என்று தனியாக உருவாக்கப்படவில்லை என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் நடந்தது. அதாவது சென்னை சென்ட்ரலிலிருந்து செல்லும் மெட்ரோ ரயிலில் ஏற கட்டிட தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், கூர்மையான கட்டுமான பொருட்களை வைத்திருப்பதாக கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரும் விவாதமாக வெடித்த நிலையில், தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications