8 மணி நேர பயணத்தில் ஏசியே இல்லை.. கொதித்தெழுந்த பயணிக்கு ஆதரவாக தீர்ப்பு.. ஓலாவிற்கு "பறந்த" பைன்
வாடிக்கையாளர் விகாஸ் பூஷனுக்கு வந்த மின்னஞ்சல்தான் இந்த வழக்கில் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
பெங்களூரு: சுமார் 80 கி.மீ தொலைவுக்கு ஏசி வேலை செய்யாத காரை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 'ஓலா' நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் இளம் தொழிலதிபர் விகாஸ் பூசன் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி தனது நண்பர்களுடன் 8 மணி நேரம் பயணத்திற்காக முன்கூட்டியே 'ஓலா' வாடகை கார் நிறுவனத்தில் பிரைம் செடானை முன் புக் செய்திருந்தார். இவர் புக் செய்ததை போல குறிப்பிட்ட நேரத்திற்கு கார் இவரது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்துக்கொண்டு சுமார் 80 கி.மீ தொலைவுக்கு பயணிக்க ஆயத்தமாகியுள்ளார்.
ஆனால் இந்த பயணம் முழுவதும் காரில் ஏசி இயங்கவில்லை. இதனால் விகாஸ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து அந்த நாளின் பயணத்தின் முடிவில் அவர் காருக்கான தொகையாக ரூ.1,837-ஐ கொடுத்திருக்கிறார். கார் ஓட்டுநரிடம் எதுவும் பேசாமல் அப்போதைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் ஓலா வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

ஏசி
மேலும் காரின் ஏசிக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டிருப்பின் அந்த தொகையை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், எதிர் தரப்பில் பேசிய ஊழியர்கள், ஏசி-க்கு என எந்த கூடுதல் தொகையும் வசூலிக்கப்படவில்லை என்றும், எனவே எந்த தொகையும் திருப்பி தரப்படமாட்டாது என்றும் கூறினர். இதை கேட்டு ஆத்திரமடைந்த விகாஸ், ஓலாவின் இணை நிறுவனரும் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் எம்டியான பவிஷ் அகர்வாலை அணுக முயற்சித்தார். அவருக்கு நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக எழுதி ஒரு மெயிலை அனுப்பி வைத்தார். அதேபோல டிவிட்டரிலும் அவரை தொடர்பு கொள்ள முயன்றார்.

புகார்
ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து விகாஸ் காத்திருந்து பிரயோசனம் இல்லையென கருதி அதே ஆண்டு நவம்பர் மாதம் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். இந்த புகாரையடுத்து ஓலா நிறுவனம் விகாஸ் முன்வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த பயணத்திற்கான பணத்தை திருப்பி தர மறுத்து ரூ.100 மதிப்புள்ள கூப்பனை வழங்கியது. இதனால் மிகுந்த அவமானமடைந்த விகாஸ் பெங்களூரு நகர மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். தனது புகாரில் ஓலா சேவையில் குறைபாடு இருப்பதாகவும் எனவே தனது பயணத்திற்கான கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

விசாரணை
இந்த வழக்கு விசாரணையில் விகாஸ் தரப்புக்கு ஆதாரமாக ஓலா நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட ரூ.100 மதிப்பிலான கூப்பன் முன் வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஓலா தரப்பில் 45 நாட்களுக்கு பின்னர் அதாவது கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி பதில் தாக்கல் செய்யப்பட்டது. கால தாமதம் காரணமாக இந்த பதிலை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மறுபுறம் விகாஸ் தரப்பின் புகாரை நீதிமன்றம் ஆராய்ந்தது. அதில் ஆதாரங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் அவரது புகாரை ஏற்று ஓலா நிறுவனம் தனது சேவையில் தவறு செய்துள்ளது என்பதை உறுதி செய்தது.

அபராதம்
மட்டுமல்லாது ஓலா நிறுவனத்திற்கு எதிராக இந்த தரம் குறைவான சேவைக்கு தீர்வாக ரூ.10,000 அபராதமாக விதித்தது. இந்த தொகை விகாஸ் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவருடைய வழக்கு செலவுக்காக ரூ.5,000 ஆயிரம் கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்துடன் டாக்ஸி கட்டணமாக பெற்ற 1,837 ரூபாயையும் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒலா டாக்ஸி நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications