"சாவை" தருது லிவிங் டூ கெதர்? கர்நாடகாவை உறைய வைத்த இன்னொரு "கொலை"- ரத்த கத்தியுடன் பெண் கைது!
பெங்களூர்: கர்நாடகாவில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்திய ஜோடிகள் அடுத்தடுத்து கொலையாவது பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 29 வயது வைஷ்ணவ், திருவனபுந்தரத்தை சேர்ந்த 24 வயது தேவி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோரமங்களாவில் வாடகை வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்தினர். இரு வீட்டாரும் ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த தேவி: திடீரென தேவியை அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. இதனால் பதற்றம் அடைந்த தேவி குடும்பத்தினர், அவர் வசித்த வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது வீட்டு உரிமையாளர் தேவி- வைஷ்ணவ் போர்ஷனுக்கு சென்ற போது அதிர்ந்து போனார். அங்கு ரத்த வெள்ளத்தில் தேவி சடலமாக மிதந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குக்கரில் அடித்து கொலை: இதனையடுத்து 2 நாட்கள் தேடுதலுக்குப் பின்னர் வைஷ்ணவ் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடதப்பட்ட விசாரணையில், தேவி மீது தாம் சந்தேகம் அடைந்ததாகவும் இருவருக்கும் இடையேயான சண்டையின் போது குக்கரை எடுத்து தலையில் அடித்து கொலை செய்ததாகவும் வைஷ்ணவ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கர்நாடகாவும் கேரளாவும் ஒரு சேர அதிர்ந்தன.
ஜாவித்- ரேணுகா ஜோடி: தற்போது மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாவித், கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த ரேணுகா இருவரும் காதலித்து 'லிவிங் டூ' கெதர் வாழ்க்கை நடத்தி வந்தனர். 3 ஆண்டுகளாக லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்திய இருவரது வாழ்க்கையிலும் புயல் வீசியது. நேற்று அதிகாலையிலும் ரேணுகா- ஜாவித் இடையே தகராறு நடந்தது.
சரமாரியாக குத்திய ரேணுகா: இந்த தகராறின் போது ஆத்திரத்தின் உச்சிக்குப் போன ரேணுகா, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக ஜாவித்தை குத்தினார். அதிகாலை அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜாவித்தை ரத்த வெள்ளத்தில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஜாவித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக உளிமாவு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்தனர்.
மரணத்தை தரும் வாழ்க்கை முறை?: இந்த இரு சம்பவங்கள் மட்டுமல்ல... கடந்த சில மாதங்களாக டெல்லி, மைசூரு, மும்பை என பல நகரங்களில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை கொலைகளில் முடிந்து கொண்டிருக்கிறது. இதனால் லிவிங் டூ கெதர் வாழ்க்கை மரணத்தைத் தரும் அபாயகரமானதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications