பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்களாதான் விலகுறோம்.. "கமலா" காரணமில்லை.. கர்நாடக எம்எல்ஏக்கள் பலே!

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளது கர்நாடகத்தில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அப்படி எல்லாம் எதுவும் இல்லை என பதவியை ராஜினாமா செய்துள்ளவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து கூட்டணி எம்எல்ஏ-க்களின் ராஜினாமா முடிவால் கர்நாடக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள குமாரசாமி, விரைந்து நாடு திரும்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Operation Kamala is not responsible for our resignation. said by Karnataka MLAs

இந்நிலையில் கர்நாடக கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்எல்ஏ-க்கள் 12 பேர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து பேரவைக்கு சென்ற எம்எல்ஏ-க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சட்டமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக ராஜ்பவனுக்கு சென்ற எம்எல்ஏ-க்கள், ஆளுநரையும் சந்தித்து தங்களது நிலை குறித்து விளக்கமளித்துள்ளனர்.

கவர்னரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான எச்.விஸ்வநாத், கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

கூட்டணி அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் இதுவரை 14 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ளனர் என்றார், எங்களது ராஜினாமா முடிவு குறித்து விளக்கமளிக்கவே ஆளுநரையும் சந்தித்தோம். எங்களது ராஜினாமாவை ஏற்குமாறு சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

எடியூரப்பா என்ன செய்கிறார்... ஆட்சி கவிழும் அபாயம்... கர்நாடகா விரைகிறார் முதல்வர் குமாரசாமிஎடியூரப்பா என்ன செய்கிறார்... ஆட்சி கவிழும் அபாயம்... கர்நாடகா விரைகிறார் முதல்வர் குமாரசாமி

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதாக அவர் எங்களுக்கு உறுதியளித்தார். தற்போது கர்நாடகாவை ஆண்டு வரும் அரசின் செயல்பாடு மீது அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை வரவில்லை. அதனால் தான் நாங்களாகவே முன்வந்து எங்களது பதவியை ராஜினாமா செய்கிறோம்.

மற்றபடி பல்வேறு தரப்பினர் கூறுவது போல பாஜகவின் ஆபரேஷன் தாமரை காரணமாக, நாங்கள் எங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

English summary
The resignation of some MLAs from the ruling coalition has caused great political tension in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X