ராணுவத்திற்காக.. கர்நாடகா முழுக்க மசூதிகளில் இன்று சிறப்பு தொழுகை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் சதிவேலைகளை முறியடித்து உரிய முறையில் அட்டாக் செய்து வருகிறது நம் நாடு. நம் நாட்டின் முப்படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் நிலை குலைந்து போய் உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக கர்நாடகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை செய்யப்படும் என்று அமைச்சர் ஜமீர் அகமது கான் உத்தரவிட்டுள்ளார்.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை நம் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

operation-sindoor-special-prayers-for-our-soldiers-in-mosques-across-karnataka-today-says-minister

ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுத்து வருகின்றனர். அதேபோல் விமானப்படை, கப்பற்படை முழுவீச்சில் பாகிஸ்தானை அட்டாக் செய்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்கள் விமானப்படை, கப்பற்படை மூலம் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இப்படி நம் நாட்டுக்காக இரவு, பகல் பாராமல் முப்படை வீரர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் ராணுவ வீரர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று இன்று கர்நாடகாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. இதனை கர்நாடகா மாநில வீட்டு வசதி மற்றும் வக்பு விவகாரத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.

இதுபற்றி ஜமீர் அகமது கான் கூறுகையில், ‛‛வெள்ளிக்கிழமையான இன்று மாநிலத்தில் வக்பு கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகள் உள்பட அனைத்து மசூதிகளிலும் நம் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு தொழுகை செய்யப்பட உள்ளது. நம் நாட்டை பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தில் செயல்பட்ட வீரர்களுக்கான இந்த தொழுகை மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.

மேலும் இதுதொடர்பாக ஜமீர் அகமது கான் கர்நாடகா மாநில வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்லாமியர்களை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மதியம் நடக்கும் தொழுகை என்பது மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இன்று நம் நாட்டின் ராணுவத்துக்காக கர்நாடகா மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த அமைச்சர் ஜமீர் அகமது கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்னொரு கருத்தையும் தெரிவித்து இருந்தார். ‛‛நாங்கள் இந்தியர்கள். பாகிஸ்தானுக்கெதிராகப் போர்ச் சூழல் வந்தால் போராடத் தயாராக இருக்கிறோம். மோடி, அமித் ஷா தற்கொலை வெடிகுண்டு கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு பாகிஸ்தான் செல்வேன்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

முன்னதாக கடந்த 7 ம் தேதி கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து கோவில்களிலும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடகா மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவில் இந்த பூஜைகள் நடந்தன. இதையடுத்து இன்று கர்நாடகா மசூதிகளில் இன்று ராணுவ வீரர்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+